Screen Reader Access     A-AA+
Arulmigu Mahadevar Temple, Vadasery, Nagercoil - 629001, கன்னியாகுமரி .
Arulmigu Mahadevar Temple, Vadasery, Nagercoil - 629001, Kanyakumari District [TM038413]
×
Temple History

தல வரலாறு

பரிவார தெய்வங்கள் கிழக்கு வெளி பிரகார முன்மண்டபத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் சாஸ்தா கோவிலும் உள்ளது. சாஸ்தாவும் இசக்கியும் இங்கு பீடமாக உள்ளனர். அருகே அமர்ந்த கோல வடிவம். பிற்கால பிரதிஷ்டை. சாஸ்தா பீடம் பழையது . மூலவருடன் தொடர்புடையது. இதற்கு தினமும் பூஜை உண்டு. முன்மண்டபத்தை அடுத்து கிழக்கு பிரகாரத்தில் வடக்கு பகுதியில் ஆவுடையம்மன் கோவில் உள்ளது. கருவறை அந்தராளம் என அமைந்தது. கருவறையின் மேல் பிற்கால விமானம் உண்டு .ஆவுடை நின்ற கோலம், கால்படிமம் இரண்டு கைகள், ஒரு கையில் தாமரை மலர், இன்னொரு கை லோலோ ஹஸ்தம். தெற்கு உட்பிரகாரத்தில் வடக்கு நோக்கி ஜுவர தேவர் இருக்கிறார். கருவறை மட்டுமே கொண்ட சிறு கோவில். கன்னியாகுமரி...

தல பெருமை

தழுவிய மஹாதேவரை ஜுவர தேவர் என சொல்வது இங்குள்ள மரபு. இக்கோவில் தெற்கு பிரகாரத்தில் ஜுவர தேவர் இருக்கிறார். மூலவர் லிங்க வடிவினர். ஆயினும் ஜுவர தேவராக கொள்கின்றனர். இக்கோவில் இறைவி ஆவுடையம்மன் குறித்து ஒரு கதை உண்டு. இந்த சிவன் கோவிலுக்கு இளம் பெண் ஒருத்தி தினமும் பால் கொண்டு வருவாள். ஒருநாள் அவள் கருவறை அருகே பால் வைத்தபோது அவளை சிவன் ஆட்கொண்டார். அங்கே அவள் அம்மனாக வழிபாடு பெற்று வருகிறார்.