நாகர்கோவில் அழகியபாண்டிபுரம் செல்லும் பாலமோர் ரோடுல் வடசேரி எஸ்.எம்.ஆர். வி மேல்நிலைப்பள்ளியின் கிழக்கே அமைந்தது இக்கோவில். பள்ளியை ஒட்டி தெற்கு வழி செல்லும் சாலையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோவில் நாகர்கோவிலின் வடக்கு வடசேரி என்னும் பகுதியில் அமைந்தது. பழையாறு இதன் அருகே ஓடுகிறது. நாகர்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 4 பேருந்தில் எஸ்.எம்.ஆர்.வி பள்ளி நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம். கோயில் அருகாமை வரை வாகனங்கள் செல்லும். கோயிலின் எதிரே பெரிய அக்ரஹார தெருவில் வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு. இக்கோயில் இருக்கும் பகுதி பேச்சுவழக்கில் தடிமார் கோயில் என அழைக்கப்படுகிறது.
| 05:30 AM IST - IST | |
| IST - 08:00 PM IST | |
| மார்கழி மாதம் திருவாதிரையில் பத்தாம் திருவிழா வரும்படி முதல் நாள் திருவிழா ஆரம்பமாகும். கொடிமரம் இல்லை. முதல் நாளில் முளையிடுதல் சடங்கு பிரதானம் . பத்து நாட்களிலும் மாணிக்கவாசகர் ஸ்ரீ பலியில் கொண்டு செல்லப்படுகிறார். தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா நடக்கிறது. | |