Screen Reader Access     A-AA+
Arulmigu Kumaraswamy Temple, Velimalai, குமாரகோயில் - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Kumaraswamy Temple, Velimalai, Brahmapuram - 629175, Kanyakumari District [TM038459]
×
Temple History

தல பெருமை

குமாரக்கோயில் முருகன் கோயில் இருக்கின்ற இடம் வேளிமலை எனப்படும். சுமார் அடி உயரமுள்ள இம்மலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. வேள் மன்னர்கள் ஆண்ட பகுதி இது. ஆதனால் வேளிமலை ஆனது. இக்கோயிலுடன் தொடர்புடைய கல்வெட்டுகள் வேளிர் மலை என்றே கூறுகின்றன. இக்கோயிலுக்கு என்று தனியாக தல புராணம்கிடையாது.கந்தபுராணக்கதையில் முருகன் வள்ளியை மணந்த வரலாற்றை இத்துடன் சார்த்தி சொல்கின்றனர். முருக பெருமான் வேள்வி நடத்திய இடமாதலால் வேளிமலை ஆயிற்று என்பது தல புராணம். குற்றாலக்குறவஞ்சி என்ற சிற்றிலக்கியத்தில் திரிகூட ராசப்பா கவிராயர் நாஞ்சில் நாட்டு வேள்வி மலை என கூறுகிறார். ...