Screen Reader Access     A-AA+
Arulmigu Kumaraswamy Temple, Velimalai, குமாரகோயில் - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Kumaraswamy Temple, Velimalai, Brahmapuram - 629175, Kanyakumari District [TM038459]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

  • உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் பணியாய் ஒளியாய் தருவாய் உயிராய் சதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே       

About Temple

நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் குமாரக்கோயில் சந்திப்பிலிருந்து 2 கீ மீ மேற்கு தொலைவில் கோவில் உள்ளது. நாகர்கோவிலிருந்து 15 கீ மீ தொலைவு பேருந்தில் சென்று குமாரக்கோயில் சந்திப்பில் இறங்கி நடந்து செல்லலாம். ஆட்டோ வசதி உண்டு.மினி பஸ் வசதி உண்டு.தங்கும் வசதி உண்டு. (தனியார்) உணவக விடுதிகள் உள்ளன.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:30 PM IST
05:00 PM IST - 08:30 PM IST
08:30 PM IST - 08:30 PM IST
சித்திரை விசு கனி காணுதல் வைகாசி திருவிழா 10 நாட்கள் ஆடி அமாவாசை (இம்மாதம் அனுஷ நட்சத்திரத்தில் கோயிலில் நிறை செய்வார்கள் கோயிலில் இருந்து நெல் கதிர்களை கொண்டு சென்று வீட்டில் வைப்பார்) ஆவணி கடைசி வெள்ளிமலர் முழுக்க விழா, மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரை அலங்கார தீபாராதனை. புரட்டாசி நவராத்திரி பூஜையை முன்னிட்டு மகம் நட்சத்திரத்தன்று காலை 5:30 மணிக்கு சுவாமி புறப்பட்டு பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், திருவனந்தபுரம் ஆரியசாலை மண்டபத்தில் எழுந்தருளல். ஐப்பசி சூர ஸம்ஹர விழா.கார்த்திகை,திருக்கார்த்திகை ,சொக்கப்பனை எரிக்கப்படுதல்.கடைசி வெள்ளிக்கிழமையன்று பல வித காவடிகள் வரும். மார்கழி சுசீந்திரம் கோயில் தேரோட்ட விழாவினை காண முருகன் புறப்படுதல். தைப்பூச திருவிழா,திருக்கல்யாண கால்நாட்டு விழா.பங்குனி அனுஷம் நாளில் இரவு திருக்கல்யாணம் நடைபெறும். வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். 9ஆம் நாள் தேரோட்டம். இந்த திருவிழாவில் சுவாமி வேட்டைக்கு செல்லுதல்,நவதானியங்கள் நடுவில் இருத்தல் சிறப்பான நிகழ்வு பத்தாம் நாள் ஆறாட்டு. பங்குனி திருக்கல்யாண விழா.வள்ளிக்கும்,முருகனுக்கும் நடந்த திருமணம் இவ்விழாவில் நடத்தி கட்டப்படும். இக்கோவிலிருந்து 2கீ மீ தொலைவில் உள்ள வள்ளி குகை அருகே பாறையில் விநாயகர்,வள்ளி, வேலவர் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் இச்சுனையில் நீராடுவார்கள்.திருக்கல்யாணம் அன்று காலை முருகன் பல்லக்கில் எழுந்தருளி வள்ளி குகை அருகே செல்வர். அன்று கஞ்சி தர்மம் நடக்கும். பிற்பகல் மணிக்கு முருகன் வள்ளியை பல்லக்கில் அழைத்து வரும் போது குறவர்கள் தடுப்பார்கள். குறவர்கள் தோல்வி சரண் அடைவார்கள். இந்த குறவர்கள் மலைப்பகுதியில் முருகன் கோயில் பின்புறம் வாழ்பவர்கள்.இரவு மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தேன்,தினைமாவு பிரசாதமாக வழங்கப்படும்.