Screen Reader Access     A-AA+
Arulmigu Mahadevar Temple, Karakandeswaram, Thirunainarkurichi - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Mahadevar Temple, Karakandeswaram, Thirunainarkurichi - 629175, Kanyakumari District [TM038527]
×
Temple History

தல வரலாறு

கருவறை கருவறை கட்டுமானம் மிக பழையது. 16 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.கல்வெட்டு சான்று உள்ளது.மூலவர் லிங்க வடிவினர்.லிங்கத்தின் தட்டையான அமைப்பும் ஆவுடையும் நீர்விழும் தூம்பும் பழமையான அமைப்பு. பரிவார தெய்வங்கள் இக்கோவிலின் பரிவார தெய்வங்கள் கணபதி,சாஸ்தா,பைரவர் ஆகியோர்.

தல பெருமை

கரைகண்டேஸ்வரர் அல்லது கறைகண்டேஸ்வரர் என்பது மூலவரின் பெயர்.இத்தலம் குறித்த கதை பாற்கடல் கடைந்த கதையடன் தொடர்புடையது.பாற்கடல் கடைந்த போது வந்த விஷத்தை சிவன் அருந்தினான்.பார்வதி அவர் கழுத்தில் கை வைத்து பிடித்தாள்.அதனால் விஷம்( கறை) கழுத்தில் நின்றது.சிவன் கறைகண்ட ஈஸ்வரன் எனப்பட்டான்.அந்த ஈஸ்வரன் குடிகொண்ட இடம் இது.கடற்கரை அருகே உள்ள ஊர்.அதோடு ஒரு காலத்தில் இப்பகுதி சைவத்தின் இருப்பிடம்.திருநயினார் குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் கடற்கரையில் பாறையில் குடைவரைக்கோவில் தோண்டும் முயற்சி பாதியில் நின்றதன் அடையாளம் இப்போதும் உண்டு.முற்று பெறாத இந்த குடைவரையின் அருகே ஒரு பாறையில் நடராஜரின் புடைப்பு சிற்பம் உள்ளது.இதன் அமைப்பின் படி கிபி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டினது என்கின்றனர்.