Arulmigu Mahadevar Temple, Thirunanthikkarai, Thirunanthikarai - 629161, கன்னியாகுமரி .
Arulmigu Mahadevar Temple, Thirunanthikkarai, Thirunanthikarai - 629161, Kanyakumari District [TM038583]
×
Temple History
தல வரலாறு
மூலவர்/கருவறை
கருவறை வட்டவடிவினது. வாசலில் துவாரபாலகர்கள்.கருவறையை ஒட்டி இடதுபுறம் விநாயகர் கோவில்,சிவன் ஆவுடையில்லிங்க வடிவம் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களை குறிப்பன.தொங்குகூரையின் கீழ் பூதவரிகள்.தாவரச்சாறு ஓவியங்கள் இருந்தன. இவை இப்போது அழிந்துவிட்டன.பழைய வரைபடம் அடையாளம் உள்ளது.இவை 18 ஆம் நூற்றாண்டு ஓவியம். கருவறை கூம்பு வடிவிலானது.உச்சியில் கலசம்.மேற்கூரை 10 செ மீ கனமுள்ள தேக்கு மரபலகையால் செய்யப்பட்டு கனமாக செப்புத்தகடு வேயப்பட்டது.இதில் 52 கழிக்கோல்கள்.இவை ஒரு வருடத்தின் 52 வாரங்களைக் குறிப்பன.
பரிவார தெய்வங்கள்
கோயில் கிழக்கு பிரகாரத்தில் சாஸ்தா அடுத்த கிருஷ்ணன்கோயில்.நின்ற கோலம். கல்படிமம் கோவில் வெளியே கிழக்கில் அரசமரம் அடியில் நாகர்,சிவன்,கணபதி ஆகியோர் உள்ளனர். இங்கு ஒரு...மூலவர்/கருவறை
கருவறை வட்டவடிவினது. வாசலில் துவாரபாலகர்கள்.கருவறையை ஒட்டி இடதுபுறம் விநாயகர் கோவில்,சிவன் ஆவுடையில்லிங்க வடிவம் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களை குறிப்பன.தொங்குகூரையின் கீழ் பூதவரிகள்.தாவரச்சாறு ஓவியங்கள் இருந்தன. இவை இப்போது அழிந்துவிட்டன.பழைய வரைபடம் அடையாளம் உள்ளது.இவை 18 ஆம் நூற்றாண்டு ஓவியம். கருவறை கூம்பு வடிவிலானது.உச்சியில் கலசம்.மேற்கூரை 10 செ மீ கனமுள்ள தேக்கு மரபலகையால் செய்யப்பட்டு கனமாக செப்புத்தகடு வேயப்பட்டது.இதில் 52 கழிக்கோல்கள்.இவை ஒரு வருடத்தின் 52 வாரங்களைக் குறிப்பன.
பரிவார தெய்வங்கள்
கோயில் கிழக்கு பிரகாரத்தில் சாஸ்தா அடுத்த கிருஷ்ணன்கோயில்.நின்ற கோலம். கல்படிமம் கோவில் வெளியே கிழக்கில் அரசமரம் அடியில் நாகர்,சிவன்,கணபதி ஆகியோர் உள்ளனர். இங்கு ஒரு சிற்பத்தை பரசுராமன் என்கின்றனர்.தாயைக் கொன்ற பாவம் தீர இங்கே வந்து தவம் செய்தார்.இங்குள்ள காற்றும் தண்ணீரும் அவருக்கு ஆறுதல் அளித்தன.
நீண்ட ஓட்டுப்பணி அரங்கு ஈசான மூலையில் திருமலையப்பன் இருக்கிறார். நின்ற கோலம்.சங்கு சக்கரம் அபய முத்திரை உண்டு.
மேற்கு சுற்று மண்டபம் சுவரில் உள்ள பெண் தெய்வம் கொட்டாரம் யட்சி.இவள் இரண்டு கைகளிலும் வாள் ஏந்தியவள்.தாவரச்சாய ஓவியம்.
தல பெருமை
இக்கோவில் நந்தி என்ற சமண துறவியின் பெயரால் அறியப்படுவது.இந்த ஊர் தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக்கோவில் சிவலிங்கம் மிதப்பது போல் கனவு கண்டார்.அடுத்த நாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதாகவும் ஊர் மக்கள் கண்டனர்.பின் அரசரின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது.இது தொடர்பாகவும் ஒரு கதை வழங்குகிறது.இக்கோவில் உருவான காலத்தில் எல்லா லக்ஷ்ணமும் பொருந்திய ரிஷபம் ஓன்று இவ்வூருக்கு வந்தது. அது ஊர் மக்களை பயமுறுத்தியது.மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியைத் தன் எதிரே அமர்த்திக்கொண்டார். அது எழுந்து விடாமல் இருக்க குழியில் அமர்த்திக்கொண்டார்.இக்கோவில் நந்தி என்ற சமண துறவியின் பெயரால் அறியப்படுவது.இந்த ஊர் தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக்கோவில் சிவலிங்கம் மிதப்பது போல் கனவு கண்டார்.அடுத்த நாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதாகவும் ஊர் மக்கள் கண்டனர்.பின் அரசரின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது.இது தொடர்பாகவும் ஒரு கதை வழங்குகிறது.இக்கோவில் உருவான காலத்தில் எல்லா லக்ஷ்ணமும் பொருந்திய ரிஷபம் ஓன்று இவ்வூருக்கு வந்தது. அது ஊர் மக்களை பயமுறுத்தியது.மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியைத் தன் எதிரே அமர்த்திக்கொண்டார். அது எழுந்து விடாமல் இருக்க குழியில் அமர்த்திக்கொண்டார்.