Arulmigu Thiruvazhi Marban Temple, Thiruppathisaram - 629901, கன்னியாகுமரி .
Arulmigu Thiruvazhi Marban Temple, Thiruppathisaram - 629901, Kanyakumari District [TM038692]
×
Temple History
புராண பின்புலம்
திருப்பதிசாரம் எனப்படும் திருவெண்பரிசாரம் என்ற ஊர் திருவாழ்மார்பன் கோயில் குறித்த தலபுராணம் அச்சில் வந்துள்ளது. இத்தலபுராணம் முதலில் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதனைத் தமிழில் சுப்பிரமணியசர்மா என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்பதிப்பில் சமஸ்கிருத மூலமும் உள்ளது. திருவாழ்மார்பன் கோயில் தலபுராணம் நரசிம்ம அவதார கதையுடன் தொடர்புடையது. நரசிம்மர் இரணியனை வதம் செய்தபின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம்அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியனின் மகனான பிரகலாதன் நரசிம்மனைத் துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர்மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக்கொண்டார். அந்தகோலத்தில் குடிகொண்டது இந்த கோயில். லட்சுமியை மார்பிலே இருத்திக்கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய இலக்குமி தன் பதியாகிய...திருப்பதிசாரம் எனப்படும் திருவெண்பரிசாரம் என்ற ஊர் திருவாழ்மார்பன் கோயில் குறித்த தலபுராணம் அச்சில் வந்துள்ளது. இத்தலபுராணம் முதலில் சமஸ்கிருதத்தில் இருந்தது. இதனைத் தமிழில் சுப்பிரமணியசர்மா என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்பதிப்பில் சமஸ்கிருத மூலமும் உள்ளது. திருவாழ்மார்பன் கோயில் தலபுராணம் நரசிம்ம அவதார கதையுடன் தொடர்புடையது. நரசிம்மர் இரணியனை வதம் செய்தபின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம்அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியனின் மகனான பிரகலாதன் நரசிம்மனைத் துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர்மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக்கொண்டார். அந்தகோலத்தில் குடிகொண்டது இந்த கோயில். லட்சுமியை மார்பிலே இருத்திக்கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய இலக்குமி தன் பதியாகிய விஷ்ணுவைச் சார்ந்து இவ்வூரில் தங்கியதால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப்பட்டது. சுசீந்திரம் கோயில் தலபுராணத்தில் இவ்வூர் பற்றிய கதை வருகிறது. ஒரு காலத்தில் சுசீந்திரம் ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு சிவ வடிவில் காட்சி அளித்தார். முனிவர்கள் திருமால் வடிவில் சிவனைக் காணவிரும்பினர். அதற்காக சோமதீர்த்தம் என்ற இடத்தில் தவம் செய்தனர். அப்போது திருமால் காட்சியளித்த கோலமே திருவெண்பரிசாரம். இதனால் திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்னமூர்த்தியாக அமர்ந்து அருள்புரிகிறார்.