Screen Reader Access     A-AA+
Arulmigu Azhageswari Jayantheeswarar Temple, Thazhakkudi - 629901, கன்னியாகுமரி .
Arulmigu Azhageswari Jayantheeswarar Temple, Thazhakkudi - 629901, Kanyakumari District [TM038699]
×
Temple History

தல வரலாறு

கருவறை மூலவர் கருவறை சிவன் ஆவுடையின் கீழ் 32அடி ஆழத்தில் இருப்பது என்கின்றனர்.இந்த லிங்க வடிவம் 12 ஆவுடைகளின் மேல் உள்ளது என்பதை 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடந்த குடமுழுக்கு விழாவில் கண்டறிந்தனர் என்கின்றனர்.இந்த சிவலிங்கம் கங்கையில் நீராட்டி வந்தது எனத் தலபுராணம் கூறுகிறது. பரிவார தெய்வங்கள் கருவறையின் வலப்புறம் தேவிக்கு தனிக்கோவில் அழகம்மன் எனப்படுகிறாள்.சுவாமியின் இடது புறம் தேவியை அமைப்பது வழக்கம். ஆனால் பாண்டி நாட்டின் மரபின்படி அம்மன் வலதுபுறம் இருக்கிறாள்.அம்மன் நின்ற கோலம். வலது கையில் நீலோத்பவ மலர். இடது கை லோலோகஸ்தம். துவிபாங்க வடிவம். கருவறையின் வெளியே தென்திசையில் தக்ஷிண மூர்த்தி நான்கு கைகளுடன் இருக்கிறார். வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர், பிரகாரத்தின்...

தல பெருமை

தாழக்குடி தலபுராணம் வாய்மொழி வடிவிலும் கையெழுத்து வடிவிலும் உள்ளது. இதை எழுதியவர் குளத்தூர் பரஞ்சோதி என்பவர்.இவர் தன் ஆசிரியர் இராமலிங்க தேசிகர் என்பவரின் அறிவுறுத்தலில் சமஸ்க்ரித் மொழியிலிருந்து கதையை தமிழ்படுத்தினார். ஏட்டுவடிவில் உள்ள இந்த தலபுராணத்தில் விருத்துப்பாடல்கள் உள்ளன.இது தாழக்குடி கோவிலில் அரங்கேறியிருக்கிறது. இந்த புராண ஆசிரியிரான தர்மலிங்க தேசிகர் பாண்டி நாட்டிலிருந்து இங்கே குடியேறியவர். இத்தலபுராணத்தில் தாழக்குடி ஊர் சயந்தீஸ்வரர் கோயில் சிவன் இந்திரன் கதையுடன் சேர்த்துக் கூறப்படுகிறது. இத்தலபுராண கதை வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்தில் வரும் சயந்தன் கதையிலிருந்து தொடங்குகிறது.ராமன் வன வாசத்தின் போது ஒரு முறை காட்டில் அமர்ந்து இருந்தான். சீதை அவன் மடியில் படுத்திருந்தான்....