Arulmigu Emperuman Temple, Chiramadam, சிரமடம் - 629852, கன்னியாகுமரி .
Arulmigu Emperuman Temple, Chiramadam, Chiramadam - 629852, Kanyakumari District [TM038739]
×
Temple History
தல வரலாறு
மூலவர்
கருவறை மூலவர் எம்பருமான் எனப்படுவார். நின்றகோலம்,நின்ற கோலம்.சங்கு ,சக்கரம் ஒருகை, அபயம்,கடிஹஸ்தம் இருமருங்கும் பூதேவி ,ஸ்ரீதேவி ,ஒரு கை மலர் மொட்டு,இன்னொரு கை லோலஹஸ்தம், மூன்றும் கல்படிமங்கள்.
பரிவார தெய்வங்கள்
வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கே ஆஞ்சநேயர் கோவில்,தென்மேற்கே விஷ்ணு,துர்கை கோவில்,வடகிழக்கு தர்ம சாஸ்தா,நாகர் சிலைகள் ஆகியன உள்ளன. இவை எல்லாமே கல்படிமங்கள்.உள்பிரகார கன்னிமூலையில் விநாயகர் கோவில் உள்ளதுமூலவர்
கருவறை மூலவர் எம்பருமான் எனப்படுவார். நின்றகோலம்,நின்ற கோலம்.சங்கு ,சக்கரம் ஒருகை, அபயம்,கடிஹஸ்தம் இருமருங்கும் பூதேவி ,ஸ்ரீதேவி ,ஒரு கை மலர் மொட்டு,இன்னொரு கை லோலஹஸ்தம், மூன்றும் கல்படிமங்கள்.
பரிவார தெய்வங்கள்
வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கே ஆஞ்சநேயர் கோவில்,தென்மேற்கே விஷ்ணு,துர்கை கோவில்,வடகிழக்கு தர்ம சாஸ்தா,நாகர் சிலைகள் ஆகியன உள்ளன. இவை எல்லாமே கல்படிமங்கள்.உள்பிரகார கன்னிமூலையில் விநாயகர் கோவில் உள்ளது
தல பெருமை
இக்கோவில் அருகே உள்ள வேளிமலையில்தான் மூலக்கோவில் இருந்தது. பூசகரால் அந்த மலையில் மேல் தினமும் ஏறிச்சென்று பூஜை செய்ய முடியவில்லை.அதனால் எம்பெருமானிடம் வேண்டினார்.அன்று கனவில் ஒரு குடம் நீர் கொண்டு வந்து என் திருமுன்பு வை அது உருண்டு சென்று எந்த இடத்தில் நிற்கின்றதோ அந்த இடத்தில எனக்கு கோவில் கட்டு என்றாராம்.அந்த பூசாரியும் அப்படியே செய்தார்.அன்று குடம் உருண்டு மலை அடிவாரத்தில் சமதரையில் வந்து விழுந்தது.அங்கே கோவில் எடுத்தனர்.இதன் பிறகு மூலக்கோவில் இருந்த வேளிமலை குடமுருட்டி மலை என்று பெயர் பெற்றது.
இக்கோவில் வளாகத்தில் ஆவுடையாள் கோவில் தரை மட்டத்தில் இருந்து அடி உயரம் சிறு மேட்டில் உள்ளது.இது தொடர்பாகவும் ஒரு கதை பேச படுகிறது....இக்கோவில் அருகே உள்ள வேளிமலையில்தான் மூலக்கோவில் இருந்தது. பூசகரால் அந்த மலையில் மேல் தினமும் ஏறிச்சென்று பூஜை செய்ய முடியவில்லை.அதனால் எம்பெருமானிடம் வேண்டினார்.அன்று கனவில் ஒரு குடம் நீர் கொண்டு வந்து என் திருமுன்பு வை அது உருண்டு சென்று எந்த இடத்தில் நிற்கின்றதோ அந்த இடத்தில எனக்கு கோவில் கட்டு என்றாராம்.அந்த பூசாரியும் அப்படியே செய்தார்.அன்று குடம் உருண்டு மலை அடிவாரத்தில் சமதரையில் வந்து விழுந்தது.அங்கே கோவில் எடுத்தனர்.இதன் பிறகு மூலக்கோவில் இருந்த வேளிமலை குடமுருட்டி மலை என்று பெயர் பெற்றது.
இக்கோவில் வளாகத்தில் ஆவுடையாள் கோவில் தரை மட்டத்தில் இருந்து அடி உயரம் சிறு மேட்டில் உள்ளது.இது தொடர்பாகவும் ஒரு கதை பேச படுகிறது. ஆவுடையம்மாள் விஸ்வகர்ம சமூகத்து பெண்.அவளை அரசு குடும்பத்து இளைஞன் விரும்பி மணக்க முயன்றான்.ஆனால் அவள் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை.இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவள் தன் உயிரை மாய்த்து கொண்டாள். அவள் உயிரை மாய்த்த இடமே இப்போது கோவிலாக உள்ளது.