நாகர்கோயில் அழகியபாண்யடிபுரம் செல்லும் சாலையில் திட்டுவிளை பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே கி மீ தொலைவில் அமைந்துள்ளது. இது காட்டுக்கோவில். பஸ் வசதி இல்லை. திட்டுவிளையில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்லலாம். கோவில் வளாகத்தில் வாகனம் நிறுத்த இடம் உண்டு. இக்கோவில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான வேளிமலை தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ளது.இப்பகுதி வேளிமலையைக் குடமுருட்டி மலை என்கின்றனர். குரங்கு,பன்றி,முள்ளன்பன்றி போன்ற காட்டுவிலங்குகள் நிறைந்த பகுதி.ஆதலால் சிறப்பு விசேஷங்களில் கூட இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது. நாகர்கோயிலிருந்து இக்கோவில் கி மீ தொலைவில் உள்ளது.