ஆதிகேச பெருமாள் கோவிலின் தலபுராணம் மலையாளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் உள்ளது. இவை அச்சில் வந்துள்ளன. மலையாள மொழியில் உள்ள ஹரிஹர ஐயர் எழுதிய திருவட்டாறு ஸ்தல மகாத்மியம், கேசவரு சங்கரநாராயணன் கேசி மதனம் துள்ளல், கேசி மதன ஆட்ட கதை ஆகிய மூன்றும் சமஸ்கிருத மொழி தல புராண பாதிப்பால் எழுந்தவை இத்தலப்புராண கதைகள் 17 அல்லது 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.
...ஆதிகேச பெருமாள் கோவிலின் தலபுராணம் மலையாளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் உள்ளது. இவை அச்சில் வந்துள்ளன. மலையாள மொழியில் உள்ள ஹரிஹர ஐயர் எழுதிய திருவட்டாறு ஸ்தல மகாத்மியம், கேசவரு சங்கரநாராயணன் கேசி மதனம் துள்ளல், கேசி மதன ஆட்ட கதை ஆகிய மூன்றும் சமஸ்கிருத மொழி தல புராண பாதிப்பால் எழுந்தவை இத்தலப்புராண கதைகள் 17 அல்லது 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.
ஆதிகேசவ பெருமாள் கோயில் தலபுராணம் திரேதா யுகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. பிரம்மா, விஷ்ணுவை தரிசிக்க யாகம் செய்தார். யாகச் சடங்கு பிறந்ததால் கேசன் என்று அரக்கனும் கேசி என்று அரக்கியும் பிறந்தனர். அவர்கள் பிரம்மனை வேண்டி மரணம் இல்லா வாழ்வு பெற்றனர்.
கேசன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். இந்திரனுடன் போரிட்டான். இந்திரன் ஓடி மறைந்தான் .விஷ்ணு கேசனை அழிக்க முயன்றான் முடியவில்லை அப்போது பராசக்தி கேசனை அழிக்க முடியாது, ஆதிசேஷன் கேசனை சுற்றி அரண் கட்டட்டும் விஷ்ணுவே அதன்மேல் சைனிப்பார்என்றார். விஷ்ணு அப்படியே செய்தார். கேசி ஆதிசேஷனை அழிக்க கங்கையை தியானித்து இரண்டு நதிகளாக வந்தாள். ஆனால் அறிதுயில் பெருமாளின் அருளால் அந்த ஆறுகள் கோதை யாரும் பரளி ஆறுமாக ஆயின . இக்கோயில் தொடர்பான ஹாதலேய மகரிஷியை குறிக்கும் ஒரு கதை உண்டு. சோமையானி முனிவரின் மகன் ஹாதலேயர் அவர் ஆதிகேச வழி அருளால் அஷ்டாங்க மந்திர உபதேசம் பெற்ற ரிஷி ஆனார். ஆதிகேசவன் அருகே இருக்க வரம் கேட்டிருந்தார் .
இலக்கிய பின்புலம்
கருவறை இறைவன்
கருவறையில் ஆதிகேசவன் பாம்பின் மேல் பள்ளி கொண்ட வடிவில் இருக்கிறான். 16008 சாலகிராமங்களால் உருவாக்கப்பட்ட படிமத்தின் மேல் கடும் சர்க்கரை சாத்து பூசப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த சயன படிமம். இவர் ஐந்து தலைகேசனின் மூன்று மடிப்பு அரவணையில் சயன நிலையில் தென் வடலாக காட்சி தருகிறார். முகம் சற்று மேல்நோக்கி பார்த்தது போல் அமைந்தது.
கேசவனுக்கு இரண்டு கைகள். வலது கை மடிந்து முகத்தை நோக்கி சிம்மகர்ண முத்திரை காட்டுகிறது. இடதுபுஜம் இடையாக நீட்டி கைதளத்தையும் விரல்களையும் தளிர் இலை போல் தொங்கவிட்டு பிரகாசிதமாய் அமைந்தது.
கருவறை கிழக்கு சுவரில் வரிசையாக மது,கை...கருவறை இறைவன்
கருவறையில் ஆதிகேசவன் பாம்பின் மேல் பள்ளி கொண்ட வடிவில் இருக்கிறான். 16008 சாலகிராமங்களால் உருவாக்கப்பட்ட படிமத்தின் மேல் கடும் சர்க்கரை சாத்து பூசப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த சயன படிமம். இவர் ஐந்து தலைகேசனின் மூன்று மடிப்பு அரவணையில் சயன நிலையில் தென் வடலாக காட்சி தருகிறார். முகம் சற்று மேல்நோக்கி பார்த்தது போல் அமைந்தது.
கேசவனுக்கு இரண்டு கைகள். வலது கை மடிந்து முகத்தை நோக்கி சிம்மகர்ண முத்திரை காட்டுகிறது. இடதுபுஜம் இடையாக நீட்டி கைதளத்தையும் விரல்களையும் தளிர் இலை போல் தொங்கவிட்டு பிரகாசிதமாய் அமைந்தது.
கருவறை கிழக்கு சுவரில் வரிசையாக மது,கை டவர், சூரியன் ஆகியோரும் ஆயுத புருஷர்களான சக்கரம் ,வாள், கதை ,வில் ,சங்கு ஆகியோரும் சந்திரன், கருடன் இருவரும் புடைப்பு சிற்பங்களாக உள்ளன. பாம்பணையின் முன் பூதேவி ,ஸ்ரீதேவி, ஹாதலேய முனிவர் கடும்சர்க்கரை படிமங்கள் உள்ளன .
கருவறையில் அர்ச்சனா மூர்த்தி பஞ்சலோக படிவங்கள் உள்ளன. கேசவன் நின்ற கோலத்தில் ஏக பங்கம், நான்கு கைகள், சங்கு ,சக்கரம் ஏந்தியவை பிற லோலாகஸ்தம் அபய முத்திரை மூர்த்தியின் இடது புறம் மூதேவி, வலது புறம் ஸ்ரீதேவி உள்ளனர்.
பரிவார தெய்வங்கள்
ஆதிகேசவர் கோயிலில் வடமேற்கு பிரகாரத்தில் இருக்கும் திருவம்பாடி கோயிலை உப கோயிலாக கொள்ள வேண்டும்.கருவறை தெய்வம் வேணு கோபாலன் திருவம்பாடு என்பது திரு அகம்பாடி என்பதன் மறுவியாகும்.
அகம்பாடி கோயில் சோழர்கால பாணி .ஏகதல விமானம் திராவிட பாணி. பன்னிரண்டாம் நூற்றாண்டு கட்டுமானம்.கருவறை வேணுகோபாலன் நின்ற கோல கல்படிமம். இடது காலை தரையில் ஊ ன்றி வலது காலை சற்று வளைத்து பாதம் படிய நிற்பது. உதட்டோரத்தில் பொருந்திய புல்லாங்குழல் இரு கைகளும் பிடித்துள்ளன .
தெற்கு பிரகாரத்தில் சாஸ்தா பரிவார தெய்வமாக உள்ளார். ஆதிகேஸ்வர் கோவிலில் திருப்பணி நடந்த போது இக்கோயில் கட்டப்பட்டது.இக்கோயில் கருவறை நமஸ்காரம் மண்டபம் என அமைந்தது சாஸ்தா கடிக ஆசனத்தில் இருக்கிறார். இரண்டு கைகள் இடது கை ஆசனத்தை தொட்டு இருப்பது பூஸ்வரிச முத்திரை காட்டுவது,வலது கை சின் முத்திரை காட்டுகிறது. சாஸ்தாவின் எதிரே உள்ள நமஸ்காரம் மண்டபத்தின் கூரையில் அஷ்டதிக் பாலகர்களின் மர சிற்பங்களும்
இராமாயண சிற்பங்களும் உள்ளன.
புராண பின்புலம்
தலைச்சிறப்பு
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு என்ற நூல் திருவட்டார் ஊரை குறிப்பிடுகிறது. இந்த ஊரில் எழினி ஆதன் என்ற அரசன் இருந்தான். இறையனார் அகப் பொருள் உரை, பாண்டி கோவை, கலிங்கத்துபரணி போன்ற நூல்களும் இவ்வூரை குறிப்பிடுகின்றன.
...தலைச்சிறப்பு
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு என்ற நூல் திருவட்டார் ஊரை குறிப்பிடுகிறது. இந்த ஊரில் எழினி ஆதன் என்ற அரசன் இருந்தான். இறையனார் அகப் பொருள் உரை, பாண்டி கோவை, கலிங்கத்துபரணி போன்ற நூல்களும் இவ்வூரை குறிப்பிடுகின்றன.
பன்னிரு ஆழ்வார்களில் தலைமை சான்றவரான நம்மாழ்வார் . இத்தளத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர் தம் பதிகத்தில் வட்டார வளம் மிக்கது. வன்னெஞ்ச இரணியனை மார்பு இழந்தது.வானுலருக்கு வழி திறப்பது.அரவணை மேல் பள்ளி கொண்ட திருவுருவம் இருப்பது என்கிறார். இவரது ஒரு பாடல் வருமாறு.
அருள் பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியன்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள்தருமா ஞாசலத்துள் இனிப்பிறவி யான் வேண்டேன்
மருள்ஒழுநீ மடநெஞ்சே வாட்டாற்றான் அடிவணங்கே
வங்காள வைணவத்தின் பக்தி மறுமலர்ச்சிக்கு காரணமான சைதன்ய ர் திருவட்டார் ஆலயத்திற்கு 1510 இல் வந்திருக்கிறார். இங்கு இதில் இருவருக்கு பிரம்மஸம்ஹிதயின் பாடபேதம் இல்லாத மூலப்பிரதி கிடைத்தத. இதன் ஐந்தாம் அத்தியாயத்திற்கு இங்கிருந்து உரை எழுதி இருக்கிறார் .
இஸ்கான் இயக்கத்தை நிறுவிய வேதாந்த சுவாமியின் சீடரான யோகநாதசுவாமி 1977 ஏப்ரல் 12 மாட்டுவண்டியில் திருவட்டார் கோயிலுக்கு வந்தார். கேரள வர்மா என்ற அரசன் ஆதிகேசவனே படசங்கீர்த்தனம் என்ற தலைப்பில் பாடியுள்ளார்.