தல பெருமை
தமிழகத்தின் தலைநகரான சென்னையம்பதியிலுள்ள திக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ கந்தஸ்வாமி கோயிலென வழங்கபெறும் கந்தகோட்டமாகும்.சென்னைக்கு சுமார் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். அத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்த முருகப் பெருமானே சென்னைக் கந்தகோட்டத்தில் இப்பொழுது காட்சி தந்தருளும் கந்தப்பெருமானாகும். சுமார் ஆண்டுகளுக்கு முன்னர் பாளையக்காரர் மீது பகை கொண்டு மராட்டியர்கள் அவர்களை எதிர்த்து போர் புரிந்தனர். பாளையக்காரர்களும் மராட்டியருக்கும் நடந்த கலகத்தின் போது இதுதான் சமயம் என்று கலகக்காரர்கள் நாட்டிலுள்ள கோயில் முதலிய இடங்களில் கொள்ளை அடிக்க முற்பட்டனர். கொள்ளைக்காரர்கள் நாட்டை சூறையாடுவதை கண்டு மக்கள் துன்புற்றனர். மக்கள் பஞ்சத்தாலும் பிணியாலும் பசியாலும் வாடி வதங்கினர்.திருப்போரூர் திருக்கோயிலின் ஆட்சியாளரான பொன்னம்பல தம்பிரான் இவற்றை கண்டு அச்சமுற்று இருதரப்பட்ட அரசினரால்...தமிழகத்தின் தலைநகரான சென்னையம்பதியிலுள்ள திக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ கந்தஸ்வாமி கோயிலென வழங்கபெறும் கந்தகோட்டமாகும்.சென்னைக்கு சுமார் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். அத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்த முருகப் பெருமானே சென்னைக் கந்தகோட்டத்தில் இப்பொழுது காட்சி தந்தருளும் கந்தப்பெருமானாகும். சுமார் ஆண்டுகளுக்கு முன்னர் பாளையக்காரர் மீது பகை கொண்டு மராட்டியர்கள் அவர்களை எதிர்த்து போர் புரிந்தனர். பாளையக்காரர்களும் மராட்டியருக்கும் நடந்த கலகத்தின் போது இதுதான் சமயம் என்று கலகக்காரர்கள் நாட்டிலுள்ள கோயில் முதலிய இடங்களில் கொள்ளை அடிக்க முற்பட்டனர். கொள்ளைக்காரர்கள் நாட்டை சூறையாடுவதை கண்டு மக்கள் துன்புற்றனர். மக்கள் பஞ்சத்தாலும் பிணியாலும் பசியாலும் வாடி வதங்கினர்.திருப்போரூர் திருக்கோயிலின் ஆட்சியாளரான பொன்னம்பல தம்பிரான் இவற்றை கண்டு அச்சமுற்று இருதரப்பட்ட அரசினரால் ஏற்பட்ட கலகத்தினால் அக்கலகக்காரர்கள் கோயிலிலும் புகுந்து கொள்ளையடிப்பார்கள் என்று அஞ்சி திருப்போரூர் சன்னதியில் இருந்த உத்சவ மூர்த்தியை பாதுகாவலான இடத்திற்கு கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். மூலவர் கர்ப கிரகத்திற்கு திரையிடப்பட்டது. இறைவனுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என தம்பிரான் மனம் கலங்கினார். கலகக்காரர்கள் திருபோரூர்க்கு வந்து வீடுகள் தோறும் கொள்ளையிட்டனர். பின்னர் கலகக்காரர்கள் கோயிலில் பல பொருட்களை கொள்ளை கொண்டனர். அப்போது மூலமூர்த்தியான முருகப் பெருமான் கல் திரையினின்றும் நீங்கி சேய்மையிலிருந்த ஒரு புற்றில் புகுந்து மறைந்தார்.இவ்வாறு நாட்டில் ஏற்பட்ட அழிவிற்கு பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முருகப் பெருமானை வேண்டி நாடு முன்போல் தழைக்க வேண்டடிக்கொண்டனர். மக்கள் மனம் போல் வாழ முருகப் பெருமான் திருவருள் பாலித்தார். எங்கும் மழை பெய்ததால் பஞ்சம் மறைந்தோடியது. நாட்டில் ஏற்பட்ட மன்னர்கள் கலகமும் முடிந்தது. அதனால் நாடு முன்போல் தழைத்தது.திருப்போரூர் திருக்கோயிலின் ஆட்சியாளராகிய பொன்னம்பல தம்பிரான் கோயிலில் நடந்த கொலைகளையும், கோரச்செயல்களையும் கண்டு மனம் உடைந்த நிலையில் கோயிலில் மூல மூர்த்தியை காணாமல் முருகா உமக்கும் ஆபத்து நேர்ந்ததோ எனக் கதறி மிகுந்த துயரத்தின் காரணத்தால் உயிர் நீத்தார். பொன்னம்பல தம்பிரான் இறந்தபின் கோயில் ஆட்சி பொறுப்பினை அம்பலவான தம்பிரான் ஏற்றுக் கொண்டார். கோயில் கற்பகிரஹத்தில் மூலவர் கந்தரை காணாமல் வாடி வருந்தி ஜோதி மயமாக விளங்கும் வேறொரு கந்தர் திருவுருவத்தை செய்வித்து அமைத்தார். திருப்போரூர் மலையடியில் புற்றில் புகுந்த கந்தப் பெருமானை அப்புற்றின் அருகேயிருந்த தழைத்து நின்ற வேப்ப மரத்தின் நிழல் பல நாட்கள் காத்து வந்தது. ஞான மூர்த்தியாகிய கந்தப்பெருமான் பல நாள் அப்புற்றில் தங்கியிருந்தார். பின்பு ஒரு சமயம் அப்புற்றினின்றும் வெளியே செல மனதில் நினைத்தார் கந்தப்பெருமான்.அம்பலவாண தம்பிரான் கனவில் தோன்றி நான் கற்பகிரஹத்தை விட்டு புற்றில் அமர்த்துள்ளேன் என்னை வெளியே எடுத்து செல்வாயாக என்றார். ஆனால் அத்தம்பிரான் கனவில் தோன்றியதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் உறங்கிவிட்டார். அதை கண்ட கந்தப்பெருமான் சினந்து அங்குள்ள மக்களை நோக்கி நான் கனவில் சொல்லியதை அம்பலவாணன் நம்பவில்லை என்னையும் அவன் மறந்துவிட்டான். நான் இனிமேல் இங்கு இருப்பதில்லை வாடா தேசத்துக்கு அன்புடன் செல்வேன் என்றார். கந்தப்பெருமான் கூறியவற்றை எல்லாம் மக்கள் அம்பலவானத்திடம் எடுத்து கூறினர். தம்பிரான் செவிசாய்க்கவில்லை. அசரீரியாக கூறிய கந்தசாமியும் முன்போல் புற்றில் புகுந்தார். சென்னையில் இராசப்ப செட்டி வீதியில் முத்தியாலு நாய்க்கர் என்பவருக்கு பூந்தோட்டம் இருந்தது. அங்கு பஞ்சானம் கந்தப்பாச்சாரி என்பவர் சர்வ சிததி விநாயகரை வழிபட்டு வந்தார். அவரை மக்கள் கந்தபண்டாரம் என்று அன்போடு அழைத்தனர்.. இவ ரும் வேளூர் மாரி செட்டியாரும் சிறந்த நண்பராயினார். ஆயிர வைசிய குல பேரி செட்டியார் மரபில் பிறந்த மாரி செட்டியார் ஒரு சிறந்த சிவா பக்தர். மாரி செட்டியார் தமது நண்பர் கந்தப்பாச்சாரியுடன் திருப்போரூருக்கு மாதந்தோறும் கிருத்திகையில் கால்நடையாக நடந்து சென்று அங்குள்ள கந்தப்பெருமானை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு கிருத்திகையன்று மாரி செட்டியார் அவர்களும் கந்தப்பாச்சாரியும் வழக்கம் போல் திருப்போரூருக்கு புறப்பட்டு சென்றனர். வெயில் மிக கடுமையாக இருந்தது. அவர்கள் இருவரும் கடும் வெயிலில் நடந்த்து சென்றனர். திருப்போருர் மலையின் ஓரத்தில் உள்ள ஒரு பாம்பு புற்றின் பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரம் தழைத்திருப்பதைக் கண்டு வெயிலில் நடந்து வந்த களைப்பால் அவ்விருவரம் வேப்பமர நிழலில் சிறிது இளைப்பாறி பிறகு படுத்து உறங்கினர். அப்போது புற்றிலிருந்த கந்தர் இரண்டு பக்தர்கள் வந்ததை கண்டு மனமகிழ்ந்து அப்புற்றினின்றும் வெளி வந்தார். பாம்பின் வடிவாய் உருவெடுத்து வந்த கந்தர் மாரி செட்டியார் மார்பின் மேல் ஏறிச்சென்று முகத்தின் மேல் முகத்தை வைத்து முகந்து ஆடி அவர் மேல் படுத்துக் கொண்டார். பாம்பு வடிவில் வந்த ஸ்வாமிநாதர் உறங்கும் மாரி செட்டியார் உள்ளத்தில் பதியுமாறு அவரது கனவில் தோன்றி தாம் அப்புற்றுக்கு வந்த வரலாற்றையெல்லாம் முற்றிலும் எடுத்துக்கொண்டார். அப்போது மாரி செட்டியார் கண்விழித்து பார்த்து கந்தப் பெருமானை பலவாறாக போற்றத் தொடங்கினர். பின்பு அவர் கந்தப் பெருமானை நோக்கி ஐயனே தாங்கள் எம்முடன் சென்னைக்கு வர வேண்டுகிறேன். தாங்கள் அவ்வாறு வந்தால் எங்கள் மரபினர் தங்களுக்கு திருக்கோயில் அமைத்து நாள்தோறும் மும்முறை பூசை செய்து தங்களை வணங்குவர். எனவே தாங்கள் எனது வேண்டுகோளுக்கு இணங்கி சென்னைக்கு வர வேண்டுகிறேன் என்று மாரி செட்டியார் வணங்கி நின்றார். இதை கேட்ட கருணை கடலாகிய கந்தப் பெருமான் புற்றினின்றும் வெளிவந்து சிறப்பாகத் தலையை தூக்கி மாரி செட்டியார் முகத்தை பார்த்து நகைத்து மீண்டும் புற்றுக்குள்ளே நுழைந்து சென்றார். சுவாமிகள் புற்றினுள்ளே போனபிறகு அங்கு பல அதிசயங்கள் தோன்றின.. அப்போது கந்தப்பாச்சாரியும் உறக்கத்தினின்று எழுந்தார். மாரி செட்டியார் கந்தப்பாச்சாரியார் எழுந்தவுடன் கந்தப்பெருமான் தமது கனவில் தாம் புற்றுக்கு வந்த வரலாற்றை பற்றி கூறியதை அவரிடம் எடுத்துக் கூறினார். பின்னர் அவர் கந்தப்பாச்சாரியை பார்த்து நண்பரே பாம்பு வடிவிலிருந்த கந்தப் பெருமான் என் மார்பிலே படுத்திருந்ததால் நான் பண்ணிய புண்ணியத்தின் பயனால் அப்பெருமானை தரிசித்தேன். நான் கந்தஸ்வாமியை சென்னைக்கு வரும்படி வேண்டினேன்.. அவரும் அதற்கு இசைந்தார் எனக் கூறினார். பிறகு இருவரும் அப்புற்றினிடம் சென்று அழகிய கந்தப்பெருமான் சிலையைக் கண்ட மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு மாரி செட்டியார் அப்புற்றினை மூடிவிட்டார். இருவரும் புண்ணிய தீர்த்தமாடி திருப்போரூர் திருக்கோயிலுக்கு சென்றனர். அங்கு கந்தப்பெருமானின் மயில் வாகன சேவையைக் கண்டு தரிசித்தனர். பின்பு இரவு இறுதி பத்து நாழிகைக்குள் அவர்கள் மீண்டும் அப்புற்றுக்கு வந்து பால சண்முகரைக் கண்டு அன்போடு எடுத்தனர். மாரி செட்டியாரும், கந்தப்பாச்சாரியும் புற்றை சுற்றி வந்து முருகனைப் பணிந்து போற்றி எம்மை ஆண்ட இறைவனே தாங்கள் பத்து நாள் குழந்தை வடிவாகி இலேசான உருவொடு அன்புடன் எங்களோடு வர வேண்டுகிறோம் எனக் கூறி முருகனைப் போற்றியபோது புற்று மலர்ந்தது. கந்தப்பெருமான் கருணையா அவரது திருவுருவம் கையில் எடுத்து செல்வதற்கு மிக இலேசாக இருந்தது. சிலையுருவான கந்தப்பெருமானை மாரி செட்டியார் கையில் எடுத்துக் கொண்ட போது முருகப் பெருமானை உற்றுப்பார்த்து அனணத்துக் கொண்டு பல பாக்கள் போற்றுவாராயினர். இருவரும் சென்னையை நோக்கி தம் பயணத்தை தொடர்ந்தனர். கந்தப்பெருமான் திருவுருவச் சிலையை எடுத்துச் செல்லும் போது இருந்த வழியில் ஒளிவீசக் கண்டனர். இருவரும் நாவலூர், செம்மஞ்சேரி, படுவூர் முதலிய கிராமங்களைத் தாண்டி வரும் போது குறுக்கே பக்கிங்காம் கால்வாய் இருந்தது. அது மிக ஆழமான முகத்துவாரம் ஆதலின் அங்கு இரு கரையிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இருவரும் அவ்வெள்ளத்தைக் கண்டு திகைத்து நின்றனர். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்தக் கால்வாயை எப்படி கடப்பது என்று இருவரும் தயங்கி நின்றபோது நீங்கள் இருவரும் இறங்கிச் செல்லலாம் என்று ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. மாரி செட்டியார் கந்தப்பெருமான் சிலையை தம் முதுகின்மேல் கட்டிக்கொண்டு மூச்சை அடக்கி நீரை கடந்தார். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கந்தப்பெருமான் அவ்வெள்ளத்தைத் தடுத்தார். பின்பு இருவரும் அக்கறையை சேர்ந்தனர். இருவரும் மிக்க மகிழிச்சியுடன் மூட்டைக்காரன் சாவடியை கடந்து திருவான்மியூர் திருக்கோயிலை அடைந்தனர். திருக்குளத்தின் படியின் மேல் சிலையை வைத்து உற்று பார்த்தனர். என்ன விந்தை திருவுருவச்சிலை இருந்த இடம் ஒளி வெள்ளமாய் காட்சியளித்தது. திருவுருவச் சிலையை மீண்டும் முதுகில் கட்டிக்கொண்டு இருவரும் திருமயிலாப்பூரை அடைந்தனர். அங்கிருந்த குளக்கரையின் அருகே உள்ள தென்னஞ்சசோலையில் நடந்து வந்த கலைப்பினார் உறங்கிவிட்டனர். இருவரும் உறங்குவதைக் கண்டு கந்தப்பெருமான் அந்தணர் வேடம் பூண்டு அங்கு வந்து தம்பிகளே இன்னுமா உறங்குகின்றீர்கள் என் அவர்களைத் தட்டி எழுப்பிவிட்டு மறைந்தார். பிறகு அவர்கள் திருமயிலையைக் கடந்து திருவல்லிக்கேணி சென்று அங்கு ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலின் கோபுரத்தைக் கண்டு வணங்கி சென்னைக்கு மெல்ல நடந்து சென்றனர். பொழுதும் புலர்ந்தது. நண்பர்கள் இருவரும் சென்னை பூங்கா நகர் வந்து சேர்ந்தனர். சாலி வாகன சகாப்தம் ஆயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து கி.பி. ஆயிரத்து அறுநூற்றி எழுபது மூன்றுக்கு சரியான பிரமாதீச ஆண்டு மார்கழித திங்கள் உரோஹிணி நட்சத்திரத்தில் பூர்வபக்ஷ சஷ்டி திதியில் போரூர் கந்தப்பெருமான் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை பெத்து நாய்க்கன் பேட்டை இராசப்ப செட்டி தெருவில் முதது நாயக்கன் தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த சர்வ சித்தி விநாயகர் கோயிலுக்குள் திருப்போருர்க் கந்தப்பெருமானை மாரி செட்டியார் அவர்களும் கந்தப்பாச்சாரியும் அமர்த்தினார்கள் . இச்செய்தி அறிந்த மக்கள் பலர் கந்தப்பெருமானை வந்து தரிசித்து மகிழிந்தனர். மாரி செட்டியார் கந்தப்பெருமானுக்கு கோயில் கட்ட எண்ணி இது குறித்து தம் மனைவி ஆதிலட்சுமி அம்மையாருடன் ஆலோசனை கேட்டார். அம்மையார் சற்றும் தயங்காமல் தாம் அணிந்திருந்த நகைகளையெல்லாம் கொடுத்து திருப்பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். உடனே கோயில் கட்டுவதற்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக இறங்கினர். அப்போது அம்மையார் வீட்டிலுள்ள மற்ற பொருட்களையும் விற்று திருப்பணிக்கு செலவிடலாம் என கூறினார். திருக்கோயில் வானுயர எழுந்தது. மாரி செட்டியார் அவர்கள் தம் சொந்த செல்வங்களையும் பல அன்பர்களின் உதவியாலும் கந்தப்பெருமானுக்குச் சிறந்த முறையில் கும்பாபிஷேகம் செய்து முடித்தார். இதுவே கந்தப்பெருமான் தோன்றித் துலங்கிய வரலாறு ஆகும்.