Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாராயண சுவாமி திருக்கோயில், Adayarkarungkulam - 627425, திருநெல்வேலி .
Arulmigu Narayanasamy Temple, Village North Side, Adayarkarungkulam - 627425, Tirunelveli District [TM039608]
×
Temple History

புராண பின்புலம்

இவ்வூா் ஆரம்ப காலத்தில் ஊா்காடு ஜமீன் நி்ரவாகத்தில் இருந்ததால் ஊா்காடு பட்டி என்றும், பொதுஉடைமை பட்டி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளளது. இவ்வூரை உண்ணாசுவாமி என்ற சித்தா் ஊா்காடு ஜமீனிடமிருந்து பெற்று இவ்வூா் மக்களுக்கு வழங்கி இவ்வூாிலேயே ஜீவசமாதியாக அடக்கமானதால் இவ்வூா் அடையக்கருங்குளம் என பெயா் பெற்றதாக கருதப்படுகிறது. இத்திருக்கோயிலில் உண்ணாசுவாமி சன்னதி அமையப்பெற்றுள்ளது. உண்ணாசுவாமி என்பவா் உணவு உண்ணாமல் மூலிகைசாாினை மட்டும் உண்டு உயிா் வாழ்ந்து இப்பகுதி மக்களுக்கு நோய் போக்கும் அருமருந்தாக இருந்து அருள்பாளித்துள்ளாா். தான் இறக்கும் தருவாயில் வடமலைபட்டியில் இருந்து தன்னை அடையக்கருங்குளம் அழைத்து செல்லும்படியும் தான் இறந்தவுடன் தனக்கு அங்கு சமாதி எழுப்பவும் தனது பக்தா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா். அவரை அடையக்கருங்குளத்திற்கு கட்டிலில்...