அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோயில்,, Veeravanallur - 627426, திருநெல்வேலி .
Arulmigu Boominathaswamy Temple, Veeravanallur - 627426, Tirunelveli District [TM039765]
×
Temple History
புராண பின்புலம்
அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோயில் மிகப்பழமையான சுமார் 1200 வருடம் பழமைமிக்க கோயிலாகும், இங்கு எழுந்தருளியிருக்கும் பூமிநாதசுவாமி நிலம் தொடர்புடைய பிரட்சனைகள் எதுவாயினும் எளிதில் சரிசெய்து வைக்கும் ஆற்றலுடையவர், வேதங்கள் நான்கும் இங்குபுன்னை வன வடிவெடுத்து வழிபட்டதன் விழைவாக இந்த வீரை நகரம் புன்னை வனம் என வழங்கப்பட்டது, மார்க்கண்டேயன் இறைவனை பற்றியதன் பின்னும் அவனை நெருங்க முயன்ற தர்மராஜனை இறைவன் காலால் எட்டி உதைத்த போது அவன் வந்து வீழ்ந்த இடம் இத்தவவனமாகும். இத்திருத்தலத்தை ஆண்ட மன்னன் முதல் நாள் போரில் பலவீனமடைந்து மறுநாள் போரில் வெற்றி பெற வேண்டி இறைவன் பூமிநாதரை துதித்த போது இறைவன் மன்னன் போருக்கு உதவியாக படைகளை திரளாக...அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோயில் மிகப்பழமையான சுமார் 1200 வருடம் பழமைமிக்க கோயிலாகும், இங்கு எழுந்தருளியிருக்கும் பூமிநாதசுவாமி நிலம் தொடர்புடைய பிரட்சனைகள் எதுவாயினும் எளிதில் சரிசெய்து வைக்கும் ஆற்றலுடையவர், வேதங்கள் நான்கும் இங்குபுன்னை வன வடிவெடுத்து வழிபட்டதன் விழைவாக இந்த வீரை நகரம் புன்னை வனம் என வழங்கப்பட்டது, மார்க்கண்டேயன் இறைவனை பற்றியதன் பின்னும் அவனை நெருங்க முயன்ற தர்மராஜனை இறைவன் காலால் எட்டி உதைத்த போது அவன் வந்து வீழ்ந்த இடம் இத்தவவனமாகும். இத்திருத்தலத்தை ஆண்ட மன்னன் முதல் நாள் போரில் பலவீனமடைந்து மறுநாள் போரில் வெற்றி பெற வேண்டி இறைவன் பூமிநாதரை துதித்த போது இறைவன் மன்னன் போருக்கு உதவியாக படைகளை திரளாக காண்பித்து பகை மன்னனை ஓடச்செய்தார். வீரவநங்கையம்மன், மரகதாம்பிகை ஆகியோர் இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் இறைவிகள் ஆவர். அருள்மிகு பூமிநாதசுவாமி மற்றும் அருள்தரும் மரகதாம்பிகை அருள்பாலித்து வரும் இத்திருத்தலம் வீரவநல்லூர் ஆகும். இத்திருத்தலம் பூமி (நிலம்)சொத்து தொடர்பான விடயங்களில் பூர்ண நிவர்த்தி தரும் திருத்தலமாகும். தனக்கென சொந்த நிலம் இல்லாதவர்கள் இத்திருத்தல நாயகனை வழிபட்டால் அவர்களுக்கென சொந்த நிலம் கிடைக்கச்செய்வார் மற்றும் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து அருள்பவர் ஆவார். இத்திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா சுவாமி மற்றும் அம்பாள் தனித்தேர்களில் எழுந்தருளி, திருத்தேரோட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெறும்.