Screen Reader Access     A-AA+
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில், காந்திநகர், சென்னை - 600020, சென்னை .
Arulmigu Anantha Padmanabha Swamy Temple, Gandhi Nagar, Chennai - 600020, Chennai District [TM000412]
×
Temple History

புராண பின்புலம்

ஓம் நமோ நாராயணய பத்மநாப தயாநிதே, ஸ்ரீ அனந்த பாதபங்கஜம் நமாமி ஸ்ரீ நித்ய ஸ்ரீ பூதேவி நித்ரயோக ஸ்ரீ ஸத்ய ஜோதிர்லிங்கபூஜிதாம் த்வைத்ரூப தர்மஸம்ரக்ஷணம் செய்துவரும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தில், அடையார் என்ற திவ்ய ஸ்தலத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆதிசேஷன்மேல் ஸ்ரீ அனந்த பத்மநாபனாய் போக நித்திரையில் பள்ளி கொண்டு அருள்புரிகிறார். ஸ்ரீஅனந்த பத்மநாபர் பள்ளி கொண்டிருக்க.. நாபியிலிருந்து தாமரையில் பிரம்மாவும், வலக்கை அருகில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். முன்னே ஸ்ரீதேவி. பூமிதேவி அமர்ந்து அருள்பாலிக்க மார்க்கண்டேயர், பிருகு மகரிஷிகள் அமர்ந்திருக்க, தும்புரு நாரதர்களும், முப்பத்துமுக்கோடி தேவர்களும், தரிசிக்க ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி இத்திருக்கோயில், பூலோக வைகுண்டமாய் காக்ஷி தருகிறது. இத்திருக்கோயிலில் ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீசிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்,...