தல வரலாறு

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பவானி நகரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஈரோட்டிலிருந்து பதினெட்டு கி.மீ.தொலைவில் உள்ளது. இக்கோயில் மாரியம்மன் கோயில் வீதியிலும் அருள்மிகு செல்லியாண்டி அம்மன் திருக்கோயில் அருகிலும் உள்ளது. அருள்மிகு மாரியம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறை முன்மண்டபம், சிம்மம் விளக்குத்தூண் ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது. சதுரமான கருவறையின் நடுவே அருள்மிகு மாரியம்மன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். கருவறையின் முன் எளிமையான முன்மண்டபம் காணப்படுகிறது, கருவறை முதல் விமானம் வரை செங்கல் மற்றும் சுதை கொண்டு கட்டப்பட்டுள்ளது. கருவறையின் சுவர்பகுதியில் அரைத்தூண்களும் தேவக்கோட்ட மாடங்களும் காட்டப்பட்டுள்ளன. கருவறையின் முன்னுள்ள பெரிய மண்டபத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்
தல பெருமை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறை முன்மண்டபம், சிம்மம் விளக்குத்தூண் ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது. சதுரமான கருவறையின் நடுவே அருள்மிகு மாரியம்மன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். கருவறையின் முன் எளிமையான முன்மண்டபம் காணப்படுகிறது, கருவறை முதல் விமானம் வரை செங்கல் மற்றும் சுதை கொண்டு கட்டப்பட்டுள்ளது. கருவறையின் சுவர்பகுதியில் அரைத்தூண்களும் தேவக்கோட்ட மாடங்களும் காட்டப்பட்டுள்ளன. கருவறையின் முன்னுள்ள பெரிய மண்டபத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்,