அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், - 638052, ஈரோடு .
Arulmigu Kailasanathasamy Temple, Chennimalai - 638052, Erode District [TM042640]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென அறிய வருகிறது. இத்திருக்கோயில் கட்டியவர் விபரம் அறிய இயலவில்லை, கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த வேளாளர் குலத்தில் பிறந்த செங்கத்துரை பூசாரி என்பவர் சென்னிமலை கைலாகநாதர் திருக்கோயிலின் வெளி மண்டபம், உள்மண்டபம், கோபுரம், திருமதில் ஆகிய திருப்பணிகளை செய்தார். சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலைக்கோயிலாக உள்ளதால், அனைத்து உற்சவங்களும், தைப்பூச திருவிழா புறப்டுகளும் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் (கனகசபை) 63 நாயன்மார்கள் ஒரே பீடத்தில் ஒவ்வொன்றும் சுமார் 14 செ.மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. அனைத்து உலோக...அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென அறிய வருகிறது. இத்திருக்கோயில் கட்டியவர் விபரம் அறிய இயலவில்லை, கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த வேளாளர் குலத்தில் பிறந்த செங்கத்துரை பூசாரி என்பவர் சென்னிமலை கைலாகநாதர் திருக்கோயிலின் வெளி மண்டபம், உள்மண்டபம், கோபுரம், திருமதில் ஆகிய திருப்பணிகளை செய்தார். சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மலைக்கோயிலாக உள்ளதால், அனைத்து உற்சவங்களும், தைப்பூச திருவிழா புறப்டுகளும் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் (கனகசபை) 63 நாயன்மார்கள் ஒரே பீடத்தில் ஒவ்வொன்றும் சுமார் 14 செ.மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. அனைத்து உலோக விக்ரகங்களும் இங்குதான் உள்ளது.
தல பெருமை
ஆலய அமைவிடம்
பழங்காலத்தில் கொங்கு மண்டலம் 24 பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி பூந்துறை நாடு, பூந்துறை நாட்டில் சென்னிமலை என்னும் ஊர் அமைந்துள்ளது. அங்கு வாழும் மக்கள் உழவுத் தொழிலையும், நெய்யும் நெசவுத் தொழிலையும், நம்பி வாழ்கின்றனர். ஊர் மத்தியில் நான்கு பெருவீதிகளுக்கு மையத்தில் கைலாசநாதர் வீற்றிருக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில், பெருந்துறையில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இத்திருநகரம் அமைந்துள்ளது. ஏராளமான அரசு, தனியார் பேருந்துகள் போய் வரும் வாய்ப்பு உள்ள நகரமாகவும் பழனித்திருக்கோயில் செல்பவர்கள் சென்னிமலை-சிவன்மலை-பழனி போன்று திருக்கோயில்களைத் தரிசிக்க சென்று வரலாம். இவ்வசதிகள் நிரம்பியது சென்னிமலை நகரம்.
அருள்மிகு கைலாசநாதர் ஆலய வரலாறு
சென்னிமலை இயற்கை எழில் ...ஆலய அமைவிடம்
பழங்காலத்தில் கொங்கு மண்டலம் 24 பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி பூந்துறை நாடு, பூந்துறை நாட்டில் சென்னிமலை என்னும் ஊர் அமைந்துள்ளது. அங்கு வாழும் மக்கள் உழவுத் தொழிலையும், நெய்யும் நெசவுத் தொழிலையும், நம்பி வாழ்கின்றனர். ஊர் மத்தியில் நான்கு பெருவீதிகளுக்கு மையத்தில் கைலாசநாதர் வீற்றிருக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தொலைவில், பெருந்துறையில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இத்திருநகரம் அமைந்துள்ளது. ஏராளமான அரசு, தனியார் பேருந்துகள் போய் வரும் வாய்ப்பு உள்ள நகரமாகவும் பழனித்திருக்கோயில் செல்பவர்கள் சென்னிமலை-சிவன்மலை-பழனி போன்று திருக்கோயில்களைத் தரிசிக்க சென்று வரலாம். இவ்வசதிகள் நிரம்பியது சென்னிமலை நகரம்.
அருள்மிகு கைலாசநாதர் ஆலய வரலாறு
சென்னிமலை இயற்கை எழில் சூழ்ந்த எழில் நகரம், மலையைச் சுற்றிலும் குறிஞ்சி நிலமும் வளம் சேர்க்கும் நேரத்தில் கீழ்பவானி ஆற்றின் வாய்க்கால் ஒன்று இம்மலையைச் சுற்றிச் செல்வதால் மஞ்சளும், கரும்பும், நெல்லும் விளையும் மருதநிலமாக காட்சி அளிக்கிறது. தென்திசையில் நொய்யல் ஆறு பழம்பெருமை கொண்டது. அந்த ஆறு பாயும் நிலங்களையும் உள்ளடக்கியது சென்னிமலை நகரமாகும்.
ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென நம்புகின்றனர். இத்திருக்கோயிலின் உள் நந்தி மண்டபத்திலும், நுழைவாயில் விமானத்திலும் மீன் சின்னம் செதுக்கப்பட்டுள்ளது. அதனால் இத்திருக்கோயில் கொங்கு பாண்டிய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாமென தெரிய வருகிறது.
சென்னிமலையில் தற்போது இருக்கும் கைலாசநாதர் ஆலயமானது கரூரை தலைநகரமாக கொண்டு ஆட்சிபுரிந்த கொங்கு சோழனாகிய விஜயாலயச் சோழன் என்பவரால் தனது பிரம்மஹத்தி தோசம் இங்கு வந்து தரிசனம் செய்த பிறகு நீங்கியதால் மலைக்கோயில் திருப்பணியும் அடிவாரத்தில் கானகமாக இருந்த இடத்தில் நகரத்தை அமைத்து அதன் மத்தியில் நடுநாயகமாக கைலாசநாதர் ஆலயத்தை அமைத்து இம்மலைக்கு அடிவார ஊராக ஆதியில் இருந்த பிடாரியூரில் இருந்த சிவாச்சாரியர்களையும் மற்ற பரிஜனங்களையும் சிப்பந்திகளையும் இங்கு கொண்டு வந்து குடியிருப்பு செய்து தேர்த்திருவிழாக்களை நடத்தினார் என்பது வரலாறு. கொங்கு மண்டல சதகம் எனும் நுhல் தமிழ் மண்டலம் ஐந்தில் ஒன்றான கொங்கு நாட்டினை பற்றி கூறும் நுhல் ஆகும். கொங்கு மண்டல சதகத்தில் ஊர் தொகையில் சென்னிமலை என்ற ஊர் இல்லை. பிடாரியூர் என்றே ஊர் பெயர் உள்ளதால் சென்னிமலை என்ற பெயர் பின்னாலே வந்ததென அறியப்படுகிறது. அருணகிரி நாதரும் காளிநகர் என்ற பிடாரியூரினை தான் குறிப்பிடுகின்றார்.
சரவண மாமுனிவர் சென்னிமலை மேல்கோயிலும், நகரத்திலுள்ள கைலாசநாதர் திருக்கோயிலும் நிறுவ விரும்பினார். சிற்ப நூலுணர்ந்த மயனை அழைத்து இந்த நல்ல நாளில் ஆலயம் நிறுவ வேண்டிய பொன்னும் பொருளும் நிரம்பக் கொடுத்து மயனைத் திருக்கோயில் கட்டுமாறு பணித்தார். மயனானவன் சரவண முனிவர் கூறியபடி காண்போர் வியக்கும் வண்ணம் அழகாக கோயில் அமைத்தான் என்ற தலவரலாறு கூறுகிறது. மயன் இத்திருக்கோயிலை அமைக்கும் போது அழகிய நகருண்டாக்கி,
அதில் உயர்ந்த கொடிகள், நெருங்கிய மதில்கள், பலகணிகள் விழாவர வீதிகள், செங்குன்றம், கடைவீதிகள், மாளிகைகள் அவற்றின் மேற்குளிகைகள், மாடகூடங்கள் ஆகியவற்றைச் செய்தான் என்றும், அந்நகரத்தின் உயிருக்கு இன்றியமையாத உடலைப் போலக் கையிலாயநாதன் என்னும் சிவபெருமான் கோயில் ஒன்று செய்வித்தான். மேலும் இவர் தேர்த்திருப்பணியும், தேர்த்திருவிழாவையும் செய்தார் என்று தலவரலாறு கூறுகிறது.
கி.பி.18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த வேளாளர் குலத்தில் பிறந்த செங்கத்துறை பூசாரி என்பவர் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோயிலின் வெளிமண்டபம், உள்மண்டபம், கோபுரம், திருமதில் ஆகிய திருப்பணிகளைச் செய்தால், இவர் இளமையிலேயே துறவு பூண்டார். இவரது சமாதி சென்னிமலை அடிவாரத்தில் மடத்தினுள் உள்ளது.
கி.பி.19-ம் நூற்றாண்டில் வேட்டுவபாளையம், வேளாளத் தம்பிரான் அவர்கள் சென்னிமலை பங்குனி உத்திரத்தேர் செய்தளித்தார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது.