அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென அறிய வருகிறது. இத்திருக்கோயில் கட்டியவர் விவரம் அறிய இயலவில்லை. கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த வேளாளர் குலத்தில் பிறந்த செங்கத்துறை பூசாரி என்பவர் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோயிலின் வெளிமண்டபம், உள்மண்டபம், கோபுரம், திருமதில் ஆகிய திருப்பணிகளைச் செய்தார்.