Screen Reader Access     A-AA+
அருள்மிகு ரிஷபேஸ்வரர் திருக்கோயில், செங்கம் - 606701, திருவண்ணாமலை .
Arulmigu Rishabeshwarar Temple, Chengam - 606701, Tiruvannamalai District [TM042922]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் கொண்டம நாயக்கரயன் குமார முத்து கிருஷ்ணப்ப நாயக்கரய்யன் தளவாய் திம்மப்ப நாயக்கர் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது. சங்க காலத்தில் செங்கண்மா என்றும் கல்வெட்டில் மதிரை செங்கண்மா என்றும் வழங்கப்பட்ட இத்தலத்தின் பெயர் இன்று மருவி செங்கம் என்று வழங்கப்படுகிறது இத்தளம் திருநாவுக்கரசு சுவாமிகள் கண்ணை என்று பாடப்பெற்ற தேவார வைப்புத் தலமாகும். தேவாரப் பெயர் கண்ணை என்பதாகும் இங்குள்ள இறைவனின் திருப்பெயர் கன்னை ஆட்கொண்ட நாயக்கன் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன திருக்கோயில் அர்த்த மண்டபம் மகா மண்டபம் என அமையப்பெற்றுள்ளது இங்கு கருவறையினுள் ஸ்ரீ ரிஷபேஸ்வரர் அருள்பாலிக்கின்றார் கருவறைக்கு வெளிப்புறம் சுமார் 10 அடி உயரம் உள்ள துவாரபாலகர் திருமேனி காண்போரை வியக்கச் செய்கின்றன வெளிப்பிரகாரத்தில் அம்மன் காசி விஸ்வநாதருக்கு...