தல வரலாறு
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் செய்யாற்றங்கறையின் தென்புறத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 600 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும். இதில் சப்த கன்னிமார்களும் அமைய பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு அமாவாசைகளிலில் பூஜைகளும், சிறப்பு அலங்காரமும், ஊஞ்சல் சேவை, அம்மன் உட்புறப்பாடும் நடைபெறுவது வழக்கமாகும். மேலும் குத்துவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.