திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது செங்கம் நகரில் உள்ள பல மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது. மேலும் இத்திருக்கோயிலானது அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலின் உபக்கோயில்களில் ஒன்றாகும். தொல்லியல் கருத்துரு படி 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும்.