Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், மேலன்பில் - 621702, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Sundaraja Perumal Temple, Melanbil - 621702, Thiruchirappalli District [TM044921]
×
Temple History

தல வரலாறு

பொன்னிநதி என்று அழ்வார்களால் போற்றப்பட்ட நதியான கொள்ளிடம் நதியின் வடபால் உள்ள மண்டூக புஷ்கரிணி மேல்பாகத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. வால்மீகி முனிவரின் கடுந்தவத்திற்கு உளம் மகிழ்ந்து ஸ்ரீசுந்தரராஜன் வால்மீகி மகரிஷிக்கு தரிசனம் தந்து இத்தலத்தில் அவருக்கு அருள்பாலிக்கிறார். எனவே, இத்திருத்தலம் வால்மீகி க்ஷேத்திரம் என்றும், வால்மீகிரிஷியின் அன்பிற்கு கட்டுப்பட்டு பகவான் ஸ்ரீசுந்தர்ராஜன் காட்சியருளியதால் அன்பில் என்றும் அழைக்கப்படுகிறது. அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் மூலவர் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, பிரும்மதேவர் சேஷசயனத்துடனும், உத்ஸவர் வடிவழகியநம்பி, ஸ்ரீதேவி, பூமிதேவியுடனும் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். திருமழிசை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசம் அன்பில். இத்திருக்கோயில் விமானம் தாரக விமானம் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலத்தில் தாயார் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் தனிக்கோயில் தாயாராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் தாயார்...