இத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலங்களில் 5 ஆம் இடத்தில உள்ள மிக முக்கியமான திருக்கோயிலாகும். திருச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இலால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் மேலன்பில் என்ற இடத்தில இத்திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் உள்ள பெருமாள் வடிவழகிய நம்பி என போற்றப்படுகிறார்.திருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையில் காட்சிதரும் ஏழு தலங்களுள் முக்கியமான திருகோவிலாக குறிப்பிடப்பட்டுள்ளது.