Screen Reader Access     A-AA+
அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை - 600014, சென்னை .
Arulmigu Sidhi Budhi Vinayakar and Sundareswarar Temple, Royapetta, Chennai - 600014, Chennai District [TM000046]
×
Temple History

இலக்கிய பின்புலம்

தருமமிகு சென்னை மாநகரின் நடுநாயகமாக விளங்கக்கூடிய இராயப்பேட்டை, நகரில் பக்தர்களின் உழ்வினை அகல இக்கநைகத்தில் அச்சாரூபியாக அருள்மிகு சொர்ணாம்பிகை உடனாய சுந்தரேஸ்வராக சிவபெருமான் இருங்கு எழுந்தருளியுள்ளார். மேலும், பால் சுவையுடன் தேன் சுவை போல கல்யாண குணசீலராய் அருள்மிகு சித்தி புத்தி ஸமேதராய் விநாயகப்பெருமானும் திருக்காட்சி புரிகிறார். இம்மூர்த்தியோ இத்தலத்தின் ஆதிமூர்த்தியாவார். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் கிராமத்தில் ஒர்சிறிய உட்கிராமமாய் நான்கு வீதிகளை மட்டும் கொண்ட சிறிய அளவிலான கிராமமாகவே இந்த இராயப்பேட்டை கிராமம் இருந்தது. கிராமத்தின் நான்கு புறங்களும் தென்னை தோப்புகள், வயல் வெளிகள், சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகாமையில் உள்ள குத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் இருந்தவர்கள் பெருமளவில் இவ்விடத்திற்கு குடிபெயர்ந்து வாணிபம் செய்வதற்காக வந்திருந்தனர். ஆதிசைவ மரபை சார்ந்த...