தருமமிகு சென்னை மாநகரின் இராயப்பேட்டை நகரில் பக்தர்கள் ஊழ்வினை அகல இக்கலியுகத்தில் அச்சாரூபியாக அருள்மிகு சொர்ணாம்பிகை உடனாய சுந்தரேஸ்வராக சிவபெருமான் இங்கு எழுந்தருளியுள்ளார். மேலும் பால் சுவையுடன் தேன் சுவை கலந்தது போல கல்யாண குணசீலராய் அருள்மிகு சித்தி புத்தி ஸமேதராய் விநாயகப்பெருமானும் திருக்காட்சியருளுகிறார். இம்மூர்த்தியே இத்தலத்தின் ஆதி மூர்த்தியாவார். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் கிராமத்தில் ஓர் சிறிய பகுதியாய் கிராமமாகவே இராயப்பேட்டை கிராமம் இருந்தது. ஆதிசைவ மரபை சார்ந்த அம்மக்கள் மயிலை மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய கிராமங்களில் தானிய வாணிபம் செய்து வந்தனர். வாணிபம் சிறக்கவே, அவ்வகையில் குடியிருந்த செல்வந்தர்களின் ஒருவரின் வீட்டு முன் பகுதியில் சிறிய திருக்கோயிலாக விநாயகர் சந்நதி அமைத்து வழிபட்டு வந்தனர். இராயப்பேட்டையின் நடு...