Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்ப சுவாமி திருக்கோயில், Jagir Ammmapalayam, Salem - 636302, சேலம் .
Arulmigu Vennankodi Muniyappa Swamy Temple, Jagir Ammmapalayam, Salem - 636302, Salem District [TM004865]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பசுவாமி திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டு அதுமுதல் பக்தர்கள் வணங்கி பல அறிய அருள்களை பெற்று வருகின்றனர். இத்திருக்கோயில் வெண்ணங்கொடி என்ற கொடியின் கீழ் அருள்மிகு முனியப்பசுவாமி அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறார். இதுவே இத்திருக்கோயிலின் சிறப்பாகும் தினமும் மூன்று கால பூஜை நடைபெற்று வருகிறது. காலசந்தி, உச்சிகால பூஜை, இரவு அர்த்த ஜாம பூஜை மற்றும் பகல் இரவு முழுவதும் தொடர்ந்து பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகின்றார். வாரங்களில் ஞாயிறு, புதன் வெள்ளி தினங்களிலும், அமாவாசை நாட்களிலும் அதிக பக்தர்கள் வந்து பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர். இத்திருக்கோயிலில் திருஷ்டி கழித்தல் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பரிகாரங்கள் மிக சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் 24 மணிநேரமும் திறந்திருக்கும்...

தல பெருமை

இத்திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டு அதுமுதல் பக்தர்கள் வணங்கி பல அறிய அருள்களை பெற்று வருகின்றனர். முனியப்ப சுவாமி மீது வெண்ணங்கொடி படர்ந்து குகை போல பாதுபாத்து வருகின்றன. வெண்ணங்கொடியின்கீழ் அமர்ந்து பக்தர்களுக்கு முனியப்ப சுவாமி அருள் புரிந்து வருகின்றார். எனினும் கிராம தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் முனியப்ப சுவாமி வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். தினமும் மூன்று கால பூசை நடைபெற்று வருகிறது. அம்மாவாசை, ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிக சேவார்த்திகள் வந்து பொங்கல், பலியிட்டு வழிபாடு செய்வது வழக்கம். முக்கியமாக வாகன பூசைகள் அதிகளவில் நடைபெறும். தொலைதுர பயணம் செல்லும் பக்தர்கள் இவரை வணங்கி அருள் பெற்று...