அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், சின்ன திருப்பதி, Kaaruvalli - 636305, சேலம் .
Arulmigu Prasanna Venkatramanaswamy Temple, Chinna Thirupathi, Karuvalli - 636305, Salem District [TM004872]
×
Temple History
தல பெருமை
தேவர்கள் வேண்டுகோளைச் செவி மடுத்த ஆதிசேடன் தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை மட்டும் சற்றே நகர்த்தினார். காற்றின் வேகத்தால் ஆனந்த பர்வகத்தின் ஒரு பகுதி பிளந்து வீசி எறியப்பட்டது. அது இரு துண்டுகளாகி பூமியில் விழுந்தது. அதில் ஒன்றே தொண்டை நாட்டுப் பெரிய திருப்பதி. மற்றொன்றே கொங்கு நாட்டில் விழுந்த இச்சின்னதிருப்பதி மலையாகும்.
இவ்வாறு தோன்றிய மலையில் ஒரு புற்றில் மகாவிஷ்ணு தங்கி இருந்தார்.சிவபிரானும் பிரம்மதேவனும் திருமாலுக்கு அமுது படைக்க பசுக்கூட்டங்களோடு சேர்ந்தனர். புற்றில் இருந்த திருமாலுக்கு தினமும் தவித்து வந்து உருமாறிய பசுமாடு பாலை பொழிந்தது. இப்பசுவின் மடியில் மட்டும் பால் இல்லையே என்று ஐயப்பட்ட இடையன் இப்பசுவின் போக்கைத் தனியாக கவனித்தான். ஒரு நாள் மறைந்திருந்து கவனித்து அதன் மர்மத்தை புரிந்து...தேவர்கள் வேண்டுகோளைச் செவி மடுத்த ஆதிசேடன் தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை மட்டும் சற்றே நகர்த்தினார். காற்றின் வேகத்தால் ஆனந்த பர்வகத்தின் ஒரு பகுதி பிளந்து வீசி எறியப்பட்டது. அது இரு துண்டுகளாகி பூமியில் விழுந்தது. அதில் ஒன்றே தொண்டை நாட்டுப் பெரிய திருப்பதி. மற்றொன்றே கொங்கு நாட்டில் விழுந்த இச்சின்னதிருப்பதி மலையாகும்.
இவ்வாறு தோன்றிய மலையில் ஒரு புற்றில் மகாவிஷ்ணு தங்கி இருந்தார்.சிவபிரானும் பிரம்மதேவனும் திருமாலுக்கு அமுது படைக்க பசுக்கூட்டங்களோடு சேர்ந்தனர். புற்றில் இருந்த திருமாலுக்கு தினமும் தவித்து வந்து உருமாறிய பசுமாடு பாலை பொழிந்தது. இப்பசுவின் மடியில் மட்டும் பால் இல்லையே என்று ஐயப்பட்ட இடையன் இப்பசுவின் போக்கைத் தனியாக கவனித்தான். ஒரு நாள் மறைந்திருந்து கவனித்து அதன் மர்மத்தை புரிந்து கொண்டான். குன்றின் மீதேறி குளிர்மலை வாசலுக்கு பசுபால் சொரியும் அசிதியத்தை கண்டு வியந்தான். அப்போது அக்குன்றின் மீது ஒரு சிறிய அழகிய கோவில் உருவாகியிருந்ததையும் கண்டு அவன் அதியப்பட்டான். இக்காட்சியைக் கண்ட அவனுக்கு மலைக்கண்டான் என்னும் பெயர் வந்தது. அவ்வம்சத்தினரே சுவாமி காரியங்களை செய்து வந்தனர் மலைகண்டான் மக்களிடம் அறிவித்தான். திரண்டு வந்த மக்கள் அர்ச்சாவதார மூர்த்தியாகிய வெங்கட்ரமண சுவாமி சுயம்பு மூர்த்தியாகி அக்குன்றில் நிற்பதை கண்டு மலையினின்று காத்த தெய்வம், பசுவாலேயே அடையாளம் காட்டப்பட்டு அன்பர்களுக்கு தரிசனந்தரும் தலம் இந்தப் புனித திருத்தலமாகிய சின்னத்திருப்பதியே ஆகும்.