Screen Reader Access     A-AA+
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், Mechcheri - 636453, சேலம் .
Arulmigu Badrakaliamman Temple, Mechcheri - 636453, Salem District [TM004882]
×
Temple History

தல பெருமை

கோவிலில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து வசந்தமண்டபம் உள்ளது. அதில் கொடிமரம், பலிபீடம், ஊஞ்சல், சிம்மவாகனம் ஆகியவை உள்ளன. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள விதானத்தில் சிவலிங்கம், கோமுகம் போன்றவை காணப்படுகிறது. மேலும் அதில் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மையே பார்க்கும் வண்ணம் சிங்கவாகனத்துடன் வாளேந்தி நிற்கும் பத்ரகாளியம்மன் உருவம் பஞ்சவர்ணத்தில் ஓவியமாக வரையப்பட்டு இருப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது.மகாமண்டப நுழைவு வாசலின் வலதுபுறம் 2 ஆண் பூதங்களும், இடது புறம் 2 பெண்பூதங்களும், அதன் அருகில் கணபதி இருபுறமும் வீற்றிருக்கிறார். அவரை கடந்தால் மகாமண்டபத்தில் தூண்களும் அதிலுள்ள சிற்ப வேலைபாடுகளும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. மகாமண்டபத்தின் சுவர்களில் நர்த்தன விநாயகர், நாகதேவதை, வள்ளி, தெய்வானை சமேத...