Screen Reader Access     A-AA+
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் மற்றும் அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலசுவாமி திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு - பேளூர், பேளூர் - 636104, சேலம் .
Arulmigu Thanthondriswarar And Astapuja Bala Mathana Venugopalaswamy Temple, Belur - 636104, Salem District [TM004883]
×
Temple History

தல வரலாறு

மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றுமே சிறப்பு. மூர்த்தி ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். வசிஷ்ட முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் காட்சி அருளியவர். ஸ்தலம் பஞ்ச பூத ஸ்தலங்களில் முதல் ஸ்தலம் பிரித்வி மண் ஸ்தலம் ஆக விளங்குகிறது. இந்த ஸ்தலத்திற்கு திருவேள்வியூர் என்ற பெயர் உண்டு. பராந்தக சோழன் இத்திருக்கோவிலை கட்டியுள்ளார். தீர்த்தம் வசிஷ்ட நதி வடவெள்ளாறு ஸ்வேதா நதி என்றும் அழைக்கப்படுகிறது. திருநீற்றின் சிறப்பு வசிஷ்ட முனிவர் யாகம் செய்த சாம்பலே திருக்கோயிலின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பிகையின் சிறப்பு அம்பாளுக்கு அறாம் வளர்த்த நாயகி என்ற பெயர் உண்டு. அம்பாள் ஜடாமுடியோடு நின்ற கோலத்தில்...

தல பெருமை

இவ்வூருக்கு அருகாமையில் வசித்து வந்த மாணிக்கம் செட்டி என்பவர் மிளகு வியாபாரம் செய்து வந்தார். மிளகுபொதிகளை எருதுகளின் மீது ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்று விற்று வருவது அவரது வழக்கம். அவ்வாறு ஒரு முறை மிளகுப் பொதிகளுடன் வரும்போது, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் மரங்களடர்ந்த காடாக இருந்ததாம். இரவுப்பொழுதாகி விட்டதால் இந்த இடத்தில் தங்கிச்செல்லத் தீர்மானித்து எருதுகளை இளைப்பாற வைத்துவிட்டு சமையல் செய்வதற்காக அங்கு கிடைத்த சுண்டைக்காய்களை அங்கிருந்து ஒரு கல்லின் மீது வைத்து நசுக்கினாராம். அப்போது எனக்கு கல்லடிப்பட்டு தலை நோகிறது. உன்னிடம் இருக்கும் மிளகு கொஞ்சம் எடுத்து என் தலைக்கு பற்றுப்போடு என அசரீரியாக ஒரு குரல் கேட்டதாம். அதற்கு அவர் ஏதும் விளங்காமல் என்னிடம் மிளகு எது? உளுந்துதானே...