Screen Reader Access     A-AA+
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், காளிப்பட்டி - 637501, நாமக்கல் .
Arulmigu Kandhasamy Temple, Kalipatti - 637501, Namakkal District [TM004908]
×
Temple History

தல வரலாறு

பழனிக்குச் சென்று பழனியாண்டியை தரிசிப்பது பக்தர்களின் வாழ்வில் பொற்காலம் ஆகும் ஆனால் அந்த பழனியில் குடிகொண்ட கந்தனையே நேரில் காளிப்பட்டிக்கு எழுந்தருள செய்த பெருமை பூஜாரி லட்சுமணக் கவுண்டரைச்சாரும் . இவர் கொங்கு நாட்டின் பருத்திப்பள்ளி பகுதியில் வேந்தன் செல்வன் குலத்தில் உதித்தவர். தனது சிறு குடிசையில் காவடியை வைத்து தினமும் பூஜித்து வந்தார். வருடந்தோறும் தைப்பூச தினத்தில் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று சரவண பொய்கையில் நீராடி பெருமானை வணங்கிவருவதை வழக்கமாகத் கொண்டிருந்தார். அவ்வாறு ஒரு சமயம் அவர் முருகனை வணங்கி விட்டு நடந்த களைப்புதீர ஓய்வாக படுத்து உறங்கிய போது கந்தன் அவர் கனவில் தோன்றி அன்பானவனே உன் பக்தியை மெச்சினேன் இனிமேல் நீ சிரமத்துடன் இங்கு நடந்து...