அருள்மிகு லஷ்மி நாராயணசுவாமி மற்றும் காசிவிசுவேஸ்வரசுவாமி திருக்கோயில், குமாரபாளையம் அக்ராஹாரம், குமாரபாளையம் - 638183, நாமக்கல் .
Arulmigu Lakshminarayana Swamy And Kasivisweswarar Swamy Temple, Kumarapalayam Agraharam, Kumarapalayam - 638183, Namakkal District [TM004909]
×
Temple History
தல பெருமை
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரம் கிராமமாக இருந்து வந்த காலந்தொட்டே இவ்வூரில் முதற்கோயவிலாக அமையப்பெற்றது ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில், ஸ்ரீகாசிவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி திருக்கோயிலாகும்.எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணன் மடியில் ஸ்ரீ தேவியாம் இலக்குமி சமேதரராய் அருள்பாலிக்கும் விதத்தில் உள்ளதால் ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி என்ற திருப்பெயர் பெற்றுள்ளது.இம்மூல விக்ரகம் காவேரியாற்றில் இருந்ததாகவும் அதனை எடுத்து பிரதிஷ்டை செய்ததாகவும் முன்னோர் வாயிலாக உணர முடிகிறது. அப்பொழுது கருங்கல்லால் சிறிய கோயிலாக குனிந்து செல்ல கூடிய அளவில் தான் கட்டப்பட்டு இருந்தது. மூலவிக்ரகம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி மிகவும் கம்பீரமாக அமைந்து இருந்ததால் மக்கள் நிறையவே சென்று வழிப்பட்டு கொண்டிருகந்தார்கள்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் குலதெய்வ வழிபாடு, யாக பூஜை செய்து வரும்பொழுது ஒரு...நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரம் கிராமமாக இருந்து வந்த காலந்தொட்டே இவ்வூரில் முதற்கோயவிலாக அமையப்பெற்றது ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில், ஸ்ரீகாசிவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி திருக்கோயிலாகும்.எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணன் மடியில் ஸ்ரீ தேவியாம் இலக்குமி சமேதரராய் அருள்பாலிக்கும் விதத்தில் உள்ளதால் ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி என்ற திருப்பெயர் பெற்றுள்ளது.இம்மூல விக்ரகம் காவேரியாற்றில் இருந்ததாகவும் அதனை எடுத்து பிரதிஷ்டை செய்ததாகவும் முன்னோர் வாயிலாக உணர முடிகிறது. அப்பொழுது கருங்கல்லால் சிறிய கோயிலாக குனிந்து செல்ல கூடிய அளவில் தான் கட்டப்பட்டு இருந்தது. மூலவிக்ரகம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி மிகவும் கம்பீரமாக அமைந்து இருந்ததால் மக்கள் நிறையவே சென்று வழிப்பட்டு கொண்டிருகந்தார்கள்.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் குலதெய்வ வழிபாடு, யாக பூஜை செய்து வரும்பொழுது ஒரு பெண்மணிக்கு அருள்வந்து இந்த திருக்கோயிலில் பெரிய ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்று சொல்லி சென்றார்கள். அதன் பின் ஆறு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் அனைவரும் கோயிலை புதியதாக கட்ட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.அப்பொழுது கோயிலுக்கு கூகலூர் ஐயர் ஒருவர் தினசாி பூஜை செய்து விட்டு சென்றுவிடுவார். அவரும் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவங்கள் நிறைய செய்து கோயில் சீக்கிரம் கட்டிமுக்கப்பட வேண்டும் என்று சங்கல்பம் செய்தது திருப்பணி வேலை ஆரம்பிக்க அவருடைய பூஜையும் ஒரு காரணமாக இருந்தது. அதன்பிறகு 19 1/2 அடி ஆஞ்சநேயர் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் இத்திருக்கோயில் வளாகத்திலேயே ஸ்ரீகாசி விசாலாட்சி உடமனர் ஸ்ரீகாசி விசுவேசுவர சுவாமி சன்னதி அமைந்துள்ளது.