தல வரலாறு
அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது. அம்மாபேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தாரால் உருவாக்கப்பட்டு பலதரப்பட்ட சமூக மக்களுக்கு பாத்தியப்பட்டதாலும் பலபட்டரை மாரியம்மன் திருக்கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயில் அபிஷேக தீர்த்தம் பக்தர்களின் கண் , கை, கால் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தினசரி பயன்படுத்துவதால் இந்நோய்கள் நீங்க அம்மன் அருள் பாலித்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருவதால் அம்மனை இன்றும் வழிபட்டு தீர்த்தம் பெற்றுச் செல்வது வழக்கத்தில் உள்ளது.