Screen Reader Access     A-AA+
அருள்மிகு சின்னகடை அம்மன் ரேணுகாபரமேஸ்வரி திருக்கோயில், தங்கசாலை, சென்னை - 600003, சென்னை .
Arulmigu Chinnakadai Yamman Renugaparameshwari Temple, Mint Street, Chennai - 600003, Chennai District [TM000498]
×
Temple History

தல வரலாறு

ஜமதக்கினி முனிவரின் இறைவழிபாட்டிற்கு மனைவி ரேணுகா தினமும் காலையில் பதிபக்தியால் மணலால் குடம் செய்து அதில் நீர் கொணர்ந்து இறைவழிபாடு செய்வது வழக்கம். ஒருநாள் ஆற்றுக்கரையில் ரேணுகா வானத்தில் சென்ற கந்தவர்களை மெய்மறந்து ரசித்ததால் அன்று மணலால் குடம் செய்ய இயலவில்லை. நிலைமை உணர்ந்து ஜமதக்கினி முனிவரிடம் சென்று முறையிட்டாள். ஜமதக்கினி முனிவர் கோபத்தால் வெகுண்டு நெறிதவறிய நீ உயிருடன் இருக்க அருகதை அற்றவள் எனக்கூறி மகன் பரசுராமனை அழைத்து தாயின் சிரத்தை கொய்துவிட ஆணையிடுகிறார். தந்தை வாக்கினை சிரமேற்கொண்டு தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை உணர்ந்து தயங்கிய வண்ணம் கலங்கிய நெஞ்சோடு தாயின் தலையை வெட்டி விடுகின்றார். கடமையை நிறைவேற்றிய மகனைப்பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்கின்றார். எனக்கு தாயே வேண்டும் தந்தையே...

தல பெருமை

அருள்மிகு சின்னக்கடை மாரியம்மன் கோயிலென வழங்கும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஸ்ரீ அபிராமி அம்பாள் ஸ்துதி கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும். கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் -உதவிப்பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாய் நீ அபிராமியே