அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர் - 637015, நாமக்கல் .
Arulmigu Pidari Chellandiamman Temple, Oruvanthur - 637015, Namakkal District [TM004993]
×
Temple History
தல வரலாறு
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை ஊர் மக்கள் அங்கிருந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதி நின்றது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர அருட்சுடராக ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.
தவம், யாகம் என முயற்சி செய்து இறைவனை தேடி அடியார்கள் செல்வதுண்டு. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் மக்கள். அவளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர். இவ்விடத்திலேயே பிடாரி செல்லாண்டி என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை ஊர் மக்கள் அங்கிருந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதி நின்றது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர அருட்சுடராக ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.
தவம், யாகம் என முயற்சி செய்து இறைவனை தேடி அடியார்கள் செல்வதுண்டு. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் மக்கள். அவளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர். இவ்விடத்திலேயே பிடாரி செல்லாண்டி என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை.
காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோயில் உருவானது.
தல பெருமை
பிடாாிப்பெயரைக் கொண்ட. இத்தெய்வம் உற்ச்சவ காலத்தில் மட்டுமே வெளிய வைக்கப்படும்.பிடாாிப்பெயரைக் கொண்ட. இத்தெய்வம் உற்ச்சவ காலத்தில் மட்டுமே வெளிய வைக்கப்படும்.