இத்திருக்கோயில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். முன்பு இப்பகுதியானது ஒரு ஏரியாக இருந்தது. அதில் லிங்கப்பிள்ளை குடும்பத்தார் லிங்கப்பன் கொங்கு வேளாளர் இனத்தை சேர்ந்தவர். அவர்கள் ஊரில் கணக்கு எழுதி வந்ததால் ஊர் மக்கள் பிள்ளை என்று கூறி வந்தனர். விவசாயம் செய்து வந்த காரணத்தினால் மேற்படி இடத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அந்த மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அப்படி மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு சென்ற சிறுமிகள் ஒன்று சேர்ந்து கொண்டு செங்கற்களை வைத்து சுவாமி விளையாட்டு விளையாடுவது வழக்கம். மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒன்று சிறுமிகளுக்கு தெரியாமல் பாலை செங்கற்கள் மீது பாலை சொறிந்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய...இத்திருக்கோயில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். முன்பு இப்பகுதியானது ஒரு ஏரியாக இருந்தது. அதில் லிங்கப்பிள்ளை குடும்பத்தார் லிங்கப்பன் கொங்கு வேளாளர் இனத்தை சேர்ந்தவர். அவர்கள் ஊரில் கணக்கு எழுதி வந்ததால் ஊர் மக்கள் பிள்ளை என்று கூறி வந்தனர். விவசாயம் செய்து வந்த காரணத்தினால் மேற்படி இடத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அந்த மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அப்படி மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு சென்ற சிறுமிகள் ஒன்று சேர்ந்து கொண்டு செங்கற்களை வைத்து சுவாமி விளையாட்டு விளையாடுவது வழக்கம். மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒன்று சிறுமிகளுக்கு தெரியாமல் பாலை செங்கற்கள் மீது பாலை சொறிந்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய பசு வீட்டில் பால் கறக்காததால் அதை கண்ட குடும்பத்தினர் சந்தேகப்பட்டு சிறுமியை திட்டினர். இதனால் மனமுடைந்து சிறுமி சில நாட்களில் இறந்துவிட்டாள். பின்னர் ஒருநாள் பசு மாடுகளை பின் தொடர்ந்து சென்று பார்த்த லிங்கப்பிள்ளை குடும்பத்தினர் பசு மாடு செங்கற்கள் மீது பால் சொறிவதை கண்டு வியந்தனர். இதைச் தொடர்ந்து லிங்கப்பிள்ளை குடும்பத்தினர் அந்த சிறுமியின் நினைவாக அவள் வைத்து விளையாடிய இரண்டு செங்கற்களையும் அந்த இடத்தில் நட்டு சிறிய பந்தல் அமைத்து அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் என்ற பெயரிட்டு தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். சில நாட்கள் கழித்து மண்சுவர் எழுப்பி சிறிய ஓட்டு வீடாக அமைத்தனர். இந்தக் கோயிலில் விநாயகர் சிலையும் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த செங்கற்கள் இரண்டும் கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு பாலாலயம் செய்து மறுபடியும் அதே இடத்தில் அமர்ந்து இவ்வளவு ஆண்டுகள் அபிஷேகம் ஆராதனைகள் செய்தும் நல்லமுறையில் அப்படியே உள்ளது. இதிலிருந்து அதன் சக்தி எவ்வளவு என்பது வெளிப்படும். வேண்டியவர்களும், வேண்டிய வரம் அளிப்பவர் ஓங்காளி. இதில் 18 பட்டி கிராம குடிபடை மக்களும் பயபக்தியாக வணங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசித்து செல்வது இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர். வைத்தியலிங்கப்பிள்ளை மகன் முத்துக்குமார்பிள்ளை அதன்பின் அவர் குமாரர் வைத்திலிங்கப்பிள்ளை இப்படி பரம்பரை பரம்பரையாக இத்திருக்கோயில் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். 1939ம் ஆண்டு வைத்திலிங்கப்பிள்ளை அறநிலையத்துறையில் லேர்டார் முன்பு மனு செய்து பரம்பரை அறங்காவலர் உரிமையையும் பெற்றுள்ளார். மேற்படி வைத்திலிங்கம்பிள்ளையின் மகன் தி.வை.முத்துக்குமாரரும் அவருக்கு பின் அவரது துணைவியார் சாந்திமுத்துக்குமார் என்பவரும் தங்களது பரம்பரை கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இலாகா விதிகளின்படி திருக்கோயிலின் நடைமுறைகளை சிறப்பான முறையில் தங்கு தடையின்றி நடத்தி வருகின்றனர்.