Arulmigu Elayaperumal And Venkatramanasamy Temple, Korakuttai, Erayamangalam - 637210, Namakkal District [TM004995]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி யானவர் முளசி கண்ணங்குலசு கொங்கு நாட்டு கவுண்டர்கள் கூட்த்தாருக்குக் குலதெய்வமாகக் திகழ்கிறார். முளசை அன்னத் தியாகி வேலப்பன் என்பவருக்கு இளையான் என்ற பெயரும் உண்டும். இவ்விளையான்தான் கோரக்குட்டை மலையில் இளைய பெருமாளை எழுந்தருளச் செய்தவர். இம்மலையின் நடுவில் அமைந்துள்ள குகைப் பகுதியில் உள்ளே இளைய பெருமாள் திருக்கோயில் முன்னமே இருந்தது. வேலப்பனின் முன்னோர் அந்த தெய்வத்தை தமது குலதெய்வமாகக் கொண்டு பல்லாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
வேலப்பன் மலையின் மேல் இளைய பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பினார். விக்கிரம பாண்டியனைப் போற்றுபம் வகையில் அம்மலைக்கு விக்கிரமாச்சலம் என்று பெயர் சூட்டினார். காலப்போக்கில் இக்கோயில் பழுது பட்டது. அதன்பின்னர்...அருள்மிகு இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி யானவர் முளசி கண்ணங்குலசு கொங்கு நாட்டு கவுண்டர்கள் கூட்த்தாருக்குக் குலதெய்வமாகக் திகழ்கிறார். முளசை அன்னத் தியாகி வேலப்பன் என்பவருக்கு இளையான் என்ற பெயரும் உண்டும். இவ்விளையான்தான் கோரக்குட்டை மலையில் இளைய பெருமாளை எழுந்தருளச் செய்தவர். இம்மலையின் நடுவில் அமைந்துள்ள குகைப் பகுதியில் உள்ளே இளைய பெருமாள் திருக்கோயில் முன்னமே இருந்தது. வேலப்பனின் முன்னோர் அந்த தெய்வத்தை தமது குலதெய்வமாகக் கொண்டு பல்லாண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
வேலப்பன் மலையின் மேல் இளைய பெருமாளுக்கு திருக்கோயில் எழுப்பினார். விக்கிரம பாண்டியனைப் போற்றுபம் வகையில் அம்மலைக்கு விக்கிரமாச்சலம் என்று பெயர் சூட்டினார். காலப்போக்கில் இக்கோயில் பழுது பட்டது. அதன்பின்னர் அன்னத்தியாகி மரபில் வந்த பெயர ரங்கைய கவுண்டர் என்பவர் இத்திருக்கோயிலுக்கு சில திருப்பணிகள் செய்தார். இதனை மாம்பழக் கவிராயர் எழுதிய பாடல் மூலம் அறியலாம்.
அரிய சீதேவி, பூதேவியுஞ் சக்கரத்தாழ்வாரு
மனுமந்தனும், அவிர்பாக மண்டபம், அரங்க
மண்டபம், முதனந்தத் திருப்பணிகள் நடத்தியதை அப்பாடல் குறிப்பிடுகிறது. இளைய பெருமாள், அருள்மிகு பிரசன்ன வெங்கடரமண சுவாமியாக சீதேவி, பூதேவியுடன் தற்போது காட்சி தருகிறார். பெருமாள் மலை மீது எழிலுடன் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.