Arulmigu Palagai Karagam Temple, Hosur To Thali Road, Belagondapalli - 635114, Krishnagiri District [TM005271]
×
Temple History
தல வரலாறு
ஓசூர் நகருக்கு அருகில் உள்ள பேளகொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 40 - 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் கர்நாட்டகா - தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்கள் இத்திருக்கோயிலை ஒன்றினைந்து கட்டியுள்ளனர். திருவிழா காலத்தில் அணைவரும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்புடன் விழாவினை நடத்துவர்.
இத்திருக்கோயில் கருவரையில் அருள்மிகு பலகை கரக அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூல விக்ரகம் கற்சிலையால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் கரகம் எடுக்கும் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் ஆண்கரகமாக உத்தம கரக அம்மனும், பெண் கரகமாக பலகை கரக அம்மனும் இணைந்து நடுஜாமத்தில் ஊர்வலமாக ஊரைச்சுற்றி வருவார்கள்.
மாதம் ஒருமுறை...ஓசூர் நகருக்கு அருகில் உள்ள பேளகொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 40 - 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் கர்நாட்டகா - தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்கள் இத்திருக்கோயிலை ஒன்றினைந்து கட்டியுள்ளனர். திருவிழா காலத்தில் அணைவரும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்புடன் விழாவினை நடத்துவர்.
இத்திருக்கோயில் கருவரையில் அருள்மிகு பலகை கரக அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூல விக்ரகம் கற்சிலையால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் கரகம் எடுக்கும் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் ஆண்கரகமாக உத்தம கரக அம்மனும், பெண் கரகமாக பலகை கரக அம்மனும் இணைந்து நடுஜாமத்தில் ஊர்வலமாக ஊரைச்சுற்றி வருவார்கள்.
மாதம் ஒருமுறை அமாவாசை அன்று சிறப்பு பூஜை மற்றும் அபிழேகம் நடைபெரும். இது தவிர மாதாந்திரம் உற்சவ பூஜை, தீபாவளி, பொங்கல், நவராத்திரி, ஆடி மாதம், புத்தாண்டு பிறப்பு என சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இத்திருக்கோயில் ஓசூரிலிருந்து தளி செல்லும் வழியில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துளளது. தளி மார்கத்தில் செல்லும் பேருந்துகளில் பேளகொண்டப்பள்ளி என்ற கிராமத்தில் இறங்கி இக்கோயிலுக்குச்செல்லலாம்.
வாரத்தில் ஒவ்வெறு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் இத்திருக்கோயில் திறந்திருக்கும்.
இத்திருகோயிலின் விலாசம்.
அருள்மிகு பலகைகரகம் திருக்கோயில்,
பேளகொண்டப்பள்ளி கிராமம்,
தேன்கனிக்கோட்டை வட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.