Screen Reader Access     A-AA+
அருள்மிகு இரத்தின விநாயகர் மற்றும் துர்க்கையம்மன் திருக்கோயில், இராயப்பேட்டை, சென்னை - 600014, சென்னை .
Arulmigu Rathina Vinayagar and Durgai Amman Temple, Rayapettai, Chennai - 600014, Chennai District [TM000061]
×
Temple History

தல பெருமை

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரில் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி உத்தண்டிச் சாவடி எனப் பெயர் கொண்டிருந்தது எனத் தெரிய வருகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு துர்க்கையம்மனும் இரத்தினவிநாயகர் பெருமானும் மிக்க அருள் சக்தி வாய்ந்தவர்கள். இரத்தின விநாயகர் பெயர்க்காரணம்: இரத்தின என்ற சொல்லுக்கு நவரத்தின கற்கள் குறிக்கும் விநாயகர் எனவும், நவகிரக தோஷம் நிவர்த்தி செய்யும் விநாயகர் எனவும், மேலும் நவசக்தி அருள் பாலிக்கும் விநாயகர் எனவும் அவைகள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, தியாக சக்தி,...