Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாதேஸ்வரசாமி திருக்கோயில், Pattukanampatti - 636905, தர்மபுரி .
Arulmigu Madeshwaraswamy Temple, Pattukanampatti - 636905, Dharmapuri District [TM006322]
×
Temple History

தல பெருமை

முதலாம் இராஜராஜன் தகடூர் பகுதி நுளம்பர்கள் வசமாயிருந்தது. அதனை கைப்பற்றி நிகரிலிசோழமண்டலம் எனப்பெயரிட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஆட்சிபுரிந்துள்ளான் அதுசமயம இப்பகுதியில் அமைந்த பல திருக்கோயில்களுக்கு நிவந்தங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளான். இதற்கு சான்றாக அமைவதே இந்தக் கல்வெட்டுகள் ஆகும். மேலும் அவன் காலத்தில் ஸ்ரீ மகாதேவர் எனத்திருக்கோயில் அமைத்து சிறப்பித்துள்ளான். திருக்கோயிலில் எஞ்சிய சிற்பங்களாகவே தட்சிணாமூர்த்தி, ஜோஷ்டாதேவி, நந்தி போன்றவைகள் சான்றாக காணப்படுகின்றன. முதலாம் இராஜராஜன் காலத்தில் புறமலைநாட்டு அரியூருடைய வீரசோழக் காமுண்டன் மகன் நன்னி காமுண்டன் நெல்வாய் மகாதேவர் திருச்சென்டைக்கு நிவந்தமாக...