தல வரலாறு
இத்திருக்கோயில் பிரம்மபுரி ஷேத்திரம் என அழைக்கப்படும். பிரம்மா இத்திருக்கோயிலில் பிரம்மா பூஜை செய்ததால், அயன் என்றால் பிரம்மா எனவே அயன்புரம் என்று நாளடைவில் பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் வைகாணச ஆகமம்படி பூஜை நடந்து வருகிறது. நம்மாழ்வார், அண்ணன்மார்கள், அனிபோல் செந்தாமரை கண்ணன் என்று நம்மாழ்வார் பிரபந்தத்தில் பத்து பாட்டு பாடியுள்ளார். இத்திருக்கோயிலில் விஷேசமான சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் அங்கபிரதட்ஷனம் செய்து பலவிதமான பலன்களை பெற்றுவருவது விஷேசமானமானதாகும்.