Screen Reader Access     A-AA+
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பரங்கிமலை, சென்னை - 600016, சென்னை .
Arulmigu Kasiwishvanathan Temple, Paraigimalai, Chennai - 600016, Chennai District [TM000008]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு தமிழ்நாடு திருக்கோயில்கள் நிறைந்த திருநாடு. வானவளாவில் கோபுரங்கள் உலகிற்கே ஒரு புதுமை தமிழ் நாகரீகத்தின் சின்னங்கள், வற்றாத கலை ஊற்றுக்ள் கலையுலகத்திற்கு தமிழர் அளித்த கலைக்கொடைகள், கோயில், கோவில், கோஇறை, இல் தங்கும் இடம். ஆக கோயில் என்பது இறை தங்கும் இடமாகும். கோயிலை ஆலயம் என்றும் அழைப்பர். ஆலயம் என்பதை ஆ லயம் என்று பிரிக்கலாம் ஆ என்றால் ஆன்மா என்பது பொருள். லயம் என்றால் சேருவதற்கு உரிய இடம் (லயித்தல்) எனப் பொருளாகும். இப்பொருள்படி கடவுளது திருவடியில் ஆன்மா சேருவதற்குரிய அதாவது லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கொள்ளலாம். நிலத்தடியில் நீர் எங்கும் நிறைந்திருந்தாலும் ஒரு கிணறு வெட்டி...