Screen Reader Access     A-AA+
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை - 600041, சென்னை .
Arulmigu Marundheeswarar Temple, Thiruvanmiyur, Chennai - 600041, Chennai District [TM000087]
×
Temple History

தல வரலாறு

இத்திருத்தலம் பல்லவர்கள் அரசாண்ட ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய அருளாளர்களால் பாடப்பெற்றிருப்பதால் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கோயிலாகக் கருதப்பெறுகிறது. இத்திருக்கோயில் அம்மன் கருவறையின் புறச்சுவரிலுள்ள ஏழு கல்வெட்டுகளின் மூலம் ஆம் நூற்றாண்டில் ஆண்ட பரகேசரிவர்மன் எனும் முதலாம் இராஜேந்திரன் இராஜாதிராஜன் இராஜேந்திர சோழதேவன் முதலான சோழமன்னர்கள் இத்திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்திருப்பதையும், கோயிலுக்குக் கொடைகள் பல ஏற்படுத்தி இருப்பதையும் அறிய முடிகிறது.கங்கை கொண்ட சோழன் எனும் இராஜேந்திர சோழன் இத்திருக்கோயில் வழிபாட்டில் பெரிதும் ஈடுபாடு உடையவனாகவும், இத்தலத்திற்குப் பலமுறை வந்ததாகவும், அந்திம காலத்தில்...

புராண பின்புலம்

மார்க்கண்டேய முனிவர் உபதேசித்தபடி, வான்மீகி முனிவர் இத்திருத்தலத்தில் உறையும் இறைவனை வழிபட்டு முத்திப்பேறு பெற்றதால், அவர் பெயரால் இத்தலம் திருவான்மியூர் என அழைக்கப்படுகிறது. தேவர்கள் திருப்பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தால், இறைவன் அமுதீசர் என்றும், வேதங்கள் கூடி வழிபட்டதால், இறைவன் வேதபுரீசுவரர் என்றும் வழங்கப்படுகிறார்.மேலும், வான்மீகி முனிவருக்கு வன்னி மரத்தடியில் இறைவன் திருநடனக் காட்சியருளிய திருத்தலமாகவும், காமதேனு இறைவன் மீது பால் சொரிந்து வழிபட்ட சிறப்புடைய தலமாகவும், இந்திரன், பிரம்மதேவன், ஸ்ரீ...