Screen Reader Access     A-AA+
அருள்மிகு தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049, சென்னை .
Arulmigu Devi Baliamman Temple, Villivakkam, Chennai - 600049, Chennai District [TM000094]
×
Temple History

தல வரலாறு

வில்வாரண்யம் என்னும் வில்லிவாக்கம் ஸ்ரீபாலியம்மன் திருக்கோயில் அக்னிஷேத்திரம் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வில்லிவாக்கம் ஏரிக்கரை அருகை பெண் ஒருத்தி வேம்பு மரத்தடியில் நின்று கொண்டு அவ்வழியே வருவோர் போவோரை பார்த்து என் உடல் எரிச்சலடைகிறது. இந்த ஏரியில் நீர் எடுத்து வந்து எனக்கு அபிஷேகம் செயுங்கள் என்று கூறினார். உடனே அங்கிருந்த பெண்கள் அந்த ஏரியிலிருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். அப்படி செய்த அபிஷேகத்தினால் மனம் மகிழ்ந்து தெய்வக்களையுடன் காட்சியளித்த அந்த பெண் சாந்தியடைத்தாள். அதே நேரத்தில் அங்கு இருந்த பெண்களுக்கு ஒருவிதமான மன நிம்மதியும் சாந்தியும் உண்டாயிற்று. உடனே அந்த பெண் எனது முற்பிறவி ரேணுகாபரமேஸ்வரி என்பதாகும். மாரி என்றும் நாமம் பெற்றேன். இப்பொழுது இங்குள்ள...