இத்திருக்கோயிலில் அம்மன் அக்னி தெய்வமாக விளங்கி வருவதாலும். உடல் வெப்பம் தணிக்க ஏறியிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதாலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். திருமணத் தடை நீங்கி சந்தான செல்வத்துடன் சகல செல்வங்களும் பெற்று குறையின்றி நோய் அற்று நிறைவுடன் வாழ அபிஷேகம் செய்து அம்மன் அருள் பெறலாம். மேலும் நாகதோஷம் சர்பதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தோஷ நிவர்த்தி சர்ப சாந்தி பெற்று சுகமடையலாம். தை ஆடி செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் நூற்றுக்கணக்காண பெண்கள் வந்து பொங்கல் வைத்து தம் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.