Screen Reader Access     A-AA+
அருள்மிகு சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049, சென்னை .
Arulmigu Sowmya Damodhara Perumal Temple, Villivakkam, Chennai - 600049, Chennai District [TM000096]
×
Temple History

தல வரலாறு

சப்தரிஷிகள் - 1, வஸிஷ்டர், 2. காஷ்யபர், 3. அத்ரி, 4. ஜமத்கனி, 5. கௌதமர், 6. விஸ்வாமித்திரர், 7. பரத்வாஜர் இவர்களில் அத்ரி மஹரிஷி குமாரர் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் (ஸ்காந்த புராணம்) ஞான மார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். வில்வலன் வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து வில் வா வில்வாக்கம் மருவி வில்லிவாக்கம் என உண்டானது. அசுரகுணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு காட்டிற்குச் சென்று விட்டார். இதன் காரணமாக ரிஷிகளை பழிவாங்கும் படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள். அதன்படியே அண்ணனும், தம்பியும் சிவ பக்தர்களைப் போல வேடம் கொண்டு...