அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், South Ukkadam, Coimbatore - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Lakshminarasimma Swamy Temple, South Ukkadam, Coimbatore - 641001, Coimbatore District [TM009764]
×
Temple History
தல வரலாறு
கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், உக்கடத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு அபிமானஸ்தலமாக வழிபட்டு வருகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்களில் இஸ்தலம் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்திருக்கோயில் ஏறத்தாழ 9000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தை கடந்து கருட மண்டபமும் அதனையடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் சன்னதி என்ற வரிசைப்படி இத்திருக்கோயில் அமைப்பு உள்ளது. கருங்கல் மண்டபமான கருவறையில் மூலவர் அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் மற்றும் இலட்சுமி தாயாராக...கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், உக்கடத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு அபிமானஸ்தலமாக வழிபட்டு வருகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்களில் இஸ்தலம் சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்திருக்கோயில் ஏறத்தாழ 9000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தை கடந்து கருட மண்டபமும் அதனையடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், மூலவர் சன்னதி என்ற வரிசைப்படி இத்திருக்கோயில் அமைப்பு உள்ளது. கருங்கல் மண்டபமான கருவறையில் மூலவர் அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் மற்றும் இலட்சுமி தாயாராக சுவாமிக்கு இடது புற தொடையில் அமர்ந்தவாறு கருணைமயமாக காட்சியளிக்கிறார்.
கருட மண்டபத்தின் இடது புறத்தில் தெற்கு நோக்கி இடப்பக்கம் ஆஞ்சநேயர் சன்னதியும், தீபமண்டபம் பின்புறம் விநாயகர் சன்னதி, மூலவர் சன்னதிக்கு பின்புறம் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் சன்னதி, ஹயக்கிரீவர் சன்னதி, மகா மண்டபத்தின் வலதுபுறம் இராமானூஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிகள் ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னதியும் உள்ளன. கருட மண்டபத்திற்கு இருபுறமும் நுழைவுவாயில்களுடன் மகா மண்டபம் அர்த்த மண்டபத்துடன் இணைத்து சுற்றுப்பிரகார மண்டபம் அமைந்துள்ளது.
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். இவர் சிங்கத்தின் முகத்துடனும் மனித உடலையும் கொண்டு நரசிம்ம அவதாரம் எடுத்தார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ய எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது தொன்மை நம்பிக்கை.
திருக்கோயிலின் அருள்மிகு இலட்சுமி நரசிம்மருக்கு வைணவ நெறிமுறைகளின் படி தென்கலை சம்பரதாயப்படி பாஞ்சராத்திர ஆகமப்படி மூன்று கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவோர்க்கு பிரார்த்தனை கைமேல் பலனாக நிறைவேறி வருகிறது.