கோவை மாவட்டம், கோவை தெற்கு வட்டம், உக்கடத்தின் மையப்பகுதியில் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு அபிமானஸ்தலமாக வழிபட்டு வருகிறது. கொங்கு நாட்டில் உள்ள ஸ்தலங்களில் இஸ்தலம் சிறப்பு வாய்ந்ததாகும். சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இது கோயம்பத்தூரில் உள்ள பிரார்த்தனை ஸ்தலங்களில் ஒன்றாகும். கேரளா மற்றும் தமிழகத்தின் உள் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். திருமணம் மற்றும் கடன் பிரச்சனைகளை தீர்க்க அருள்மிகு லட்சுமி நரசிம்மரின் புனித தீபம் ஏற்றுவது இக்கோயிலின் சிறப்பு. மிக முக்கியமான நிகழ்வு சுவாதி ஹோமம், ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாட்களில் நடத்தப்படுகிறது. அந்த ஹோமத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு...