Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன், அங்காளம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி - 642001, கோயம்புத்தூர் .
Arulmigu Mariamman Angalamman Temple, Pollachi - 642001, Coimbatore District [TM009772]
×
Temple History

தல பெருமை

அன்னை அருள்மாரி சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடுகள் வேய்ந்த கோயிலில் வீற்றிருந்தே பொருளாட்சியில் அருளாட்சி புரிந்திருக்கின்றாள். பொருள் வசதி வாய்ந்திருந்தும் கூட அன்னையின் அருட்பீடத்தை கல் (தளியாக) கோயிலாக மாற்றியமைப்பதற்கு, அக்கால அன்பர்கள் அஞ்சியிருக்க கூடும் என அறிய முடிகிறது. 1945 வரை இந்நிலையே நீடித்து வந்திருக்கிறது. 1945- ஆம் ஆண்டில்தான், பொள்ளாச்சி நகரின் புகழ்மிகு புதல்வர் அன்னையில் மலரடிக்கு ஆரா அன்பினர், அமரர் திரு. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்கள் (இன்றைய பரம்பரை அறங்காவலர் திரு. ம.மாணிக்கம் அவர்களின் பாட்டனார்) அன்னையின் அருளாசியோடு, திருக்கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணியைத் துவங்க முன் வந்தார்கள். அன்னை வீற்றிருக்கும் பீடத்தை மாற்றாமல்,...