தல வரலாறு
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், சர்க்கார்சாமக்குளம் கிராமம், கோவில்பாளையத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு காலகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைப் பறிக்க எமதர்மராஜன் முயன்றபோது சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இத்திருக்கோயிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றதாக நம்பப்பபடுகிறது. ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு குருபெயர்ச்சியின் போதும் குரு இலட்சார்ச்சனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புராண பின்புலம்