அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில், கருமத்தம்பட்டி, Viralikadu - 641659, கோயம்புத்தூர் .
Arulmigu Senniandavar Temple, Viralikadu - 641659, Coimbatore District [TM009777]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயில் 1970 ஆம் ஆண்டிற்கு முன்புசிறிய திருக்கோயிலாக இருந்து வந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் காட்டுப் பகுதியாக இருந்ததாகவும், மாடு மேய்க்க வரும் சிறுவர்கள் கருவறை முன் மண்டபத்தின் முன்பாக விளையாடிக் கொண்டி ருக்கையில் எதேட்சையாக கல் ஒன்று பட்டு மூலவர் பின்னப் பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இத்திருக் கோயிலைச் சார்ந்த 12 கிராமத்தார்கள் ஒன்று கூடி புதியதாக மூலவர் சென்னியாண்ட வரை வடிவமைத்து திருக்கோயில் திருப்பணிகளைச் செய்யத் தீர்மானித்தனர். இதன் பின் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கருவறை விமானம், முன் மண்டபம், காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் திருச்சுற்று ஆலயங்கள், பொது மக்கள் அறக்கொடைகள் மூலம் அமைக்கப் பட்டு 29-6-1972 ல் திருக்குட நீராட்டுப் பெருவிழா நடைபெற் றுள்ளது. மீண்டும் திருச்சுற்றிற் குள் கல்...இத்திருக்கோயில் 1970 ஆம் ஆண்டிற்கு முன்புசிறிய திருக்கோயிலாக இருந்து வந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் காட்டுப் பகுதியாக இருந்ததாகவும், மாடு மேய்க்க வரும் சிறுவர்கள் கருவறை முன் மண்டபத்தின் முன்பாக விளையாடிக் கொண்டி ருக்கையில் எதேட்சையாக கல் ஒன்று பட்டு மூலவர் பின்னப் பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இத்திருக் கோயிலைச் சார்ந்த 12 கிராமத்தார்கள் ஒன்று கூடி புதியதாக மூலவர் சென்னியாண்ட வரை வடிவமைத்து திருக்கோயில் திருப்பணிகளைச் செய்யத் தீர்மானித்தனர். இதன் பின் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கருவறை விமானம், முன் மண்டபம், காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் திருச்சுற்று ஆலயங்கள், பொது மக்கள் அறக்கொடைகள் மூலம் அமைக்கப் பட்டு 29-6-1972 ல் திருக்குட நீராட்டுப் பெருவிழா நடைபெற் றுள்ளது. மீண்டும் திருச்சுற்றிற் குள் கல் பாவுதல், திருமண மண்டபம் கட்டுதல் மற்றும் இதரத் திருப்பணி வேலைகளைச் செய்து முடித்து 28-8-1985 ல் திருக்குட நீராட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது.பிற்கு 29.05.2015 திருக்குட நீராட்டுப் பெருவிழா நடைபெற்றுள்ளது